உயிருடன் இருந்த கொரோனா நோயாளியை இறந்துவிட்டார் என அறிவித்த மருத்துவர்கள்: நாக்பூரில் ஏற்பட்ட குழப்பம்!

உயிருடன் இருந்த கொரோனா நோயாளியை  இறந்துவிட்டார் என அறிவித்த மருத்துவர்கள்:  நாக்பூரில் ஏற்பட்ட குழப்பம்!

மாதிரி படம்

கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வந்த பெண் நோயாளி ஒருவரை இறந்துவிட்டதாக உறவினர்களுக்கு மருத்துவர்கள் தவறாக தகவல் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

  • Share this:
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர், கொரோனா பாதிப்பு கடுமையாக அதிகரித்துள்ள ஒரு பகுதியாகும். அங்குள்ள மருத்துவமனையில் 63 வயதான பெண் ஒருவர் கொரோனா தொற்றால் நேற்று அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று அப்பெண்ணின் உறவினருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தகவல் அளித்துள்ளனர். மருத்துவமனை நிர்வாகத்தினர் இறந்து போனதாக கூறப்பட்ட பெண்மணிக்கு இறப்பு சான்றிதழும் தந்துள்ளனர்.

இதனிடையே அப்பெண்ணின் வீட்டில் இறுதி சடங்குகளுக்கு உறவினர்கள் ஏற்பாடு செய்துகொண்டிருந்த நேரத்தில் திடீரென மருத்துவமனையில் இருந்து தொடர்பு கொண்டு தாங்கள் தவறுதலாக தகவல் அளித்துவிட்டதாகவும் உங்கள் உறவினர் உயிருடன் தான் உள்ளார் எனவும் கூறியிருக்கின்றனர்.

உயிருடன் இருக்கும் போதே அவர் இறந்துவிட்டார் என பொறுப்பில்லாமல் தகவல் அளித்த மருத்துவமனை நிர்வாகத்தினரை கண்டித்து அங்கு சென்ற உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் அங்கிருந்து தங்கள் உறவினரான பெண்மணியை டிஸ்சார்ஜ் செய்து வேறு மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் நாக்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஹாட் ஸ்பாட்டாக விளங்கும் நாக்பூரில் இன்று ஒரே நாளில் மட்டும் 5131 பேருக்கு புதிதாக நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். மேலும் சிகிச்சை பலனின்றி 65 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் நாக்பூரில் மட்டும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,71,355 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,706, ஆகவும் அதிகரித்துள்ளது. நாக்பூரில் மட்டும் கொரோனா சிகிச்சைப் பெற்று வருவோரின் எண்ணிக்கை 51,576 ஆக உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,45,384 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தமாக நொய்ட்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,32,05,926 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் நோய்த்தொற்றுக்காக சிகிச்சைப் பெற்று வருவோரின் எண்ணிக்கை ஆறரை மாதங்களுக்கு பிறகு மீண்டும் 10 லட்சத்தை கடந்துள்ளது. நாட்டில் தற்போது நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 10,46,631 ஆக உள்ளது.

தமிழகத்தில் உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு...


 

இதே போல கடந்த 24 மணி நேரத்தில் 794 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் 18ம் தேதிக்கு பிறகு பதிவான அதிகபட்ச உயிரிழப்பு இதுவாகும். இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 1,68,436 ஆக அதிகரித்துள்ளது.
Published by:Arun
First published: