முகப்பு /செய்தி /இந்தியா / இரு மாநிலங்களில் பாஜக ஆட்சியை பிடிக்க வாய்ப்பு.. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு விவரம்..!

இரு மாநிலங்களில் பாஜக ஆட்சியை பிடிக்க வாய்ப்பு.. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு விவரம்..!

பாஜக

பாஜக

திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த மாநிலங்களில் வாக்காளர்களிடம் வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை பல்வேறு நிறுவனங்கள் நடத்தியுள்ளன. இதில் திரிபுராவில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்றும் நாகாலாந்தில் ஆளும் என்டிபிபி மற்றும் பாஜக அணி ஆட்சியைப் பிடிக்கக் கூடும் என்றும் கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.

தொங்கு சட்டமன்றம்

மேகாலயாவில் தொங்கு சட்டப்பேரவை அமையக் கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. டைம்ஸ் நவ் நடத்திய கருத்துக் கணிப்பில் திரிபுரா மாநிலத்தில் பாஜக அணி 24 இடங்களிலும் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. பலத்த போட்டி அளித்த இடதுசாரிகள் 21 இடங்களில் வெல்வார்கள் என்றும் டிஎம்பி கட்சி 14 இடங்களில் வாகை சூடும் என டைம்ஸ் நவ் நிறுவன கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.

டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு

நாகாலாந்தை பொருத்தவரை டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 44 இடங்களில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகாலாந்து மக்கள் முன்னணியான என்பிஎப் ஆறு இடங்களிலும், இதர கட்சிகள் 9 இடங்களில் வெற்றி பெறும் என்றும் கருத்துக் கணிப்பில் மக்கள் தெரிவித்ததுள்ளனர். மேகாலயாவை பொருத்தவரை முதலமைச்சர் கோன்ராட் சங்மாவின் என்பிபி கட்சி 22 இடங்களிலும், பாஜக 5 இடங்களிலும் காங்கிரஸ் 5 இடங்களிலும் வெல்லும் என டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. அதே சமயம், இதர கட்சிகள் 29 இடங்களில் வெல்லும் என்றும் தொங்கு சட்டடபைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோல் இந்தியா டுடே குழுமத்தின் ஆக்சிஸ் மை இந்தியா நடத்திய கருத்துக் கணிப்பில் திரிபுராவில் பாஜக அணி 35 முதல் 46 இடங்களில் வென்று மீண்டும் ஆட்சியில் அமரும் என்றும் இடதுசாரி அணி 6 முதல் 11 தொகுதிகளிலும் டிஎம்பி கட்சி 9 முதல் 11 இடங்களில் வெற்றி பெறக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேகாலயாவை பொருத்தவரை இந்தியா டுடே ஆய்வில் என்பிபி கட்சி 18 முதல் 24 தொகுதிகளிலும், பாஜக 4 முதல் 8 தொகுதிகளில் வெல்லும் என்றும், காங்கிரஸ் கட்சி 6 முதல் 12 தொகுதிகளில் வெல்ல வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவருக்கும் பெரும்பான்மை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகாலாந்தில் பாஜக - என்டிபிபி கூட்டணி 38 முதல் 48 இடங்களில் வென்று ஆட்சிக் கட்டிலில் அமரும் என்றும் இந்தியா டுடே குழும கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசியல் ஆய்வு மற்றும் வியூக அமைப்பின் கருத்து கணிப்பு

இந்திய அரசியல் ஆய்வு மற்றும் வியூக அமைப்பான இந்தியின் பொலிடிகல் அனலிஸ்ட் அண்டு ஸ்ட்ரேடஜிஸ்ட் அமைப்பு நடத்திய ஆய்வில் திரிபுராவில் பாரதிய ஜனதா கட்சி மொத்தமுள்ள 60 சட்டமன்றத் தொகுதிகளில்28 தொகுதிகளிலும் அதன் கூட்டணி கட்சியான ஐபிஎப்டி 3 இடங்களிலும் வென்று ஆட்சியைப் பிடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதுபோல், மேகாலயாவில் NPP அதிகபட்சமாக 19 தொகுதிகளிலும், UDP 16 தொகுதிகளிலும் வெல்லும் என்றும், திரிணமுல் 16 இடங்களிலும் காங்கிரஸ் 8 இடங்களிலும் பாஜக ஒரே ஒரு இடத்திலும் வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடியில் துப்பாக்கிச் சூடு, கல்வீச்சு.. சட்டமன்றத் தேர்தல் வன்முறையால் நாகாலாந்தில் பதற்றம்..!

நாகாலாந்தை பொருத்தவரை முதலமைச்சர் நெய்பியு ரியோவின் என்டிபிபி 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மகன் சிராக் பாஸ்வான் கட்சியான எல்ஜேபி 11 இடங்களில் வெல்லும் வகையில் ஏற்றம் கண்டுள்ளதாக கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பாஜக 5 இடங்களிலும் தேசியவாத காங்கிரஸ் கட்சியான என்சிபி 6 இடங்களிலும் வெல்லும் என ஐ-பாஸ் தெரிவித்துள்ளது. நாகாலாந்தில் சிராக் பாஸ்வான் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கவும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published: