Home /News /national /

என்னைப்போல சிங்கிளா இருங்க.. பூமி பாரத்தை குறைங்க.. மக்கள்தொகை கட்டுப்பாடுக்கு நாகாலந்து அமைச்சர் யோசனை

என்னைப்போல சிங்கிளா இருங்க.. பூமி பாரத்தை குறைங்க.. மக்கள்தொகை கட்டுப்பாடுக்கு நாகாலந்து அமைச்சர் யோசனை

சிங்கிலாக இருக்கும் நாகாலாந்து அமைச்சர் தெம்ஜென்

சிங்கிலாக இருக்கும் நாகாலாந்து அமைச்சர் தெம்ஜென்

உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக அடுத்தாண்டு இந்தியா உருவெடுக்கும் என ஐநா ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.

    உலக மக்கள்தொகை தினம் ஜூலை 11ஆம் தேதியான நேற்று கொண்டாடப்பட்டது. மக்கள் தொகை பெருக்கம் மக்கள்தொகை கட்டுப்பாடு போன்றவை குறித்து விழிப்புணர்வு உலகம் முழுவதும் பேசப்பட்டு வரும் நிலையில், நாகாலாந்தைச் சேர்ந்த அமைச்சர் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுக்குள் வைக்க புதிய யோசனை வழங்கி ட்விட்டரில் டிரெண்ட் ஆகியுள்ளார்.

    நாகாலாந்தின் உயர் கல்வித்துறை அமைச்சரும், அம்மாநில பாஜக தலைவருமாக இருப்பவர் தெம்ஜென் இம்னா அலாங். இவர் மக்கள்தொகை தினத்தை ஒட்டி ட்விட்டிரில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், உலக மக்கள்தொகை தினமான இன்று மக்கள்தொகை பெருக்கத்தை பொறுப்புடன் கையாளும் விதமாக குழந்தைகள் பெற்றுக் கொள்வதில் கவனமாக இருங்கள். அல்லது என்னைப் போன்று அனைவரும் சிங்கிளாக இருந்து சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முயற்சி செய்யுங்கள். இன்றைய தினம் இணைந்து சிங்கில்ஸ் இயக்கத்தை தொடங்குங்கள் எனப் பதிவிட்டுள்ளார்.

    திருமணம் ஆகாமல் சிங்கிளாக இருக்கும் இந்த அமைச்சர் மக்கள்தொகையை கட்டுக்குள் வைக்க தன்னைப்போலவே சிங்கிளாக இருங்களேன் என யோசனை கூறிருப்பது சமூக வலைத்தளங்களில் சிரிப்பலையை உருவாக்கியுள்ளது. இவரது பதிவுக்கு நெட்சனங்கள் சுவாரஸ்ய பதில்களை அளித்து வருகின்றனர்.


    அமைச்சர் தெம்ஜென்னின் புகைப்படத்தை பகிர்ந்து, ஸ்டே சிங்கில், ஸ்டே க்யூட் என சிங்கிலாக இருந்து அமைச்சரைப் போல கியூட்டாக இருங்கள் என ஒருவர் பதில் பதிவு வெளியிட்டுள்ளார். நம்மை போன்ற சிங்கில்ஸ்க்கு ஒரு தலைவன் கிடைத்து விட்டான், இந்திய அரசியலின் எழுச்சி நாயகன் எனவும் இவரை புகழ்ந்து பாராட்டி சிலர் பதிவிட்டுள்ளனர். இன்னொரு யூசரோ, சிங்கிலாக இருப்பவருக்கு அரசு உதவித்தொகை வழங்க வேண்டும் என அமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

    இதையும் படிங்க: மக்கள்தொகையில் சீனாவை முந்தி முதலிடம் பிடிக்கும் இந்தியா - ஐநா ஆய்வுத் தகவல்

    உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக அடுத்தாண்டு இந்தியா உருவெடுக்கும் என ஐநா ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடம் பிடிக்கவுள்ளது. அதேவேளை, சீனாவில் இதுவரை இருந்து மக்கள்தொகை கட்டுப்பாடு காரணமாக அங்கு முதியோர் எண்ணிக்கை உயர்ந்து இளைஞர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது. எனவே, அந்நாட்டில் மீண்டும் குழந்தைப்பேறு பெறுவதற்கு அரசு ஊக்கமளித்து திட்டங்களை அறிவித்து வருகிறது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Nagaland, Population, Single

    அடுத்த செய்தி