Home /News /national /

நாகலாந்து வன்முறை : ராணுவத்தினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு

நாகலாந்து வன்முறை : ராணுவத்தினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு

நாகலாந்து வன்முறை

நாகலாந்து வன்முறை

நாகாலாந்து வன்முறை தொடர்பாக ராணுவத்தினர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

    நாகலாந்தின் மோன் மாவட்டத்தில் பணிபுரியும் சுரங்கத் தொழிலாளர்கள் கடந்த சனிக்கிழமை மாலை வேலையை முடித்து விட்டு திரும்பியபோது, மியான்மர் பயங்கரவாதிகள் என நினைத்து பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் 8 தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், பாதுகாப்பு படையினர் வாகனங்களை அடித்து உடைத்தனர்.

    இந்த கலவரத்தில் பொதுமக்கள் 5 பேர் மற்றும் ஒரு ராணுவ வீரர் உயிரிழந்தனர். பாதுகாப்பு படை முகாமுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதில் மேலும் ஒருவர் கொல்லப்பட்டார். இந்த கலவரம் காரணமாக நாகாலாந்தில் பதற்றம் நீடிக்கிறது. மோன் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே நேரத்தில் 5-க்கும் மேற்பட்டவர்கள் கூடுவதற்கும், அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து மற்ற வாகனங்களை இயக்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    Also Read : இந்தியாவில் குளிர்காலம் கடுமையாக இருக்கும் - வானிலை மையம் எச்சரிக்கை!

    அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க சிறப்பு ராணுவப் படைவினர் மோன் மாவட்டத்திற்கு விரைந்துள்ளனர். இந்த நிலையில், பொதுமக்களை கொலை செய்யும் நோக்கத்துடன் தாக்குதல் நடத்தியதாக ராணுவத்தினர் மீது மாநில காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும், வழக்கு குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில், ஐந்து பேர் கொண்ட உயர்மட்ட அளவிலான சிறப்பு விசாரணைக் குழுவையும் நாகாலாந்து அரசு அமைத்துள்ளது.
    Published by:Vijay R
    First published:

    Tags: Nagaland

    அடுத்த செய்தி