Home /News /national /

ஊடுருவல்காரர்கள் என நினைத்து துப்பாக்கிச்சூடு... நாகலாந்தில் பொதுமக்கள் 13 பேர் உயிரிழப்பு

ஊடுருவல்காரர்கள் என நினைத்து துப்பாக்கிச்சூடு... நாகலாந்தில் பொதுமக்கள் 13 பேர் உயிரிழப்பு

நாகலாந்தின், மோன் மாவட்டத்தின், திரு என்ற பகுதியில் ஊடுருவல்காரர்கள் தாக்குதல் நடத்தவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் எங்களுக்கு தகவல் அளித்தன. : ராணுவம்

நாகலாந்தின், மோன் மாவட்டத்தின், திரு என்ற பகுதியில் ஊடுருவல்காரர்கள் தாக்குதல் நடத்தவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் எங்களுக்கு தகவல் அளித்தன. : ராணுவம்

நாகலாந்தின், மோன் மாவட்டத்தின், திரு என்ற பகுதியில் ஊடுருவல்காரர்கள் தாக்குதல் நடத்தவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் எங்களுக்கு தகவல் அளித்தன. : ராணுவம்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    ஊடுருவல்காரர்கள் என தவறாக நினைத்து பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்துவதற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.

    மியான்மர் எல்லைப் பகுதியில் நாகலாந்து மாநிலத்தின் மோன் என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இதன் எல்லை வழியாக மியான்மரை சேர்ந்தவர்கள் இந்தியாவுக்குள் ஊடுருவி, தாக்க முயலும் சம்பவங்கள் நடந்துள்ளன. இதைத் தடுப்பதற்கு பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்துவது வழக்கம்.

    இந்நிலையில் ஊடுருவல்காரர்கள் என நினைத்து, நேற்று மாலை, வாகனம் ஒன்றின் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் பொதுமக்கள் 13 பேர், பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் ஒருவர் என மொத்தம் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

    பாதுகாப்பு படையினர் தவறுதலாக பொதுமக்களை சுட்டுக் கொன்ற சம்பவம், நாகலாந்தில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தால் பாதுகாப்பு படையினர் வாகனங்களை, பொதுமக்கள் தீயிட்டுக் கொளுத்தியதாக நாகலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    Also Read : சபரிமலை சன்னிதானம் அருகே யானை கூட்டம்.. பக்தர்கள் அச்சம்

    இதுதொடர்பாக இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது-
    நாகலாந்தின், மோன் மாவட்டத்தின், திரு என்ற பகுதியில் ஊடுருவல்காரர்கள் தாக்குதல் நடத்தவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் எங்களுக்கு தகவல் அளித்தன. இதன்பேரில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. வருத்தம் அளிக்கும் வகையில் துரதிருஷ்டவசமாக இதில் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இதுதொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்தப்படும். குற்றத்தை செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடும் தண்டனை வழங்கப்படும். என்று கூறப்பட்டுள்ளது.

    உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பதிவில், ''உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இதுதொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்தப்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும்.'' என்று கூறியுள்ளார்.

    Also Read : புதுக்கட்சி தொடங்கும் காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத்?

    நாகலாந்து முதலமைச்சர் ரியோ தனது ட்விட்டர் பதிவில், ''பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் சம்பவம், வன்மையாக கண்டிக்கத்தக்கது. உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இந்த விவகாரத்தில் சட்டப்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு, நீதி கிடைக்கும். மாநில மக்கள் அமைதியை நிலைநாட்டும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். என்று கூறியுள்ளார்

     
    Published by:Musthak
    First published:

    Tags: Indian army, Nagaland

    அடுத்த செய்தி