Home /News /national /

நாகலாந்தில் பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்: மத்திய அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

நாகலாந்தில் பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்: மத்திய அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.16 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மத்திய அரசு ரூ.11 லட்சமும், மாநில அரசு ரூ.5 லட்சமும் வழங்குகின்றன.

    நாகாலாந்தில் பாதுகாப்பு படையினரால் பொதுமக்கள் 14 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய மற்றும் நாகலாந்து அரசுகளுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக மத்திய உள்துறை செயலர், நாகலாந்து மாநில தலைமை செயலாளர், காவல்துறை தலைவர் ஆகியோர் 6 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்.

    ஊடகங்களில் வந்த செய்திகளின் அடிப்படையில் தாமாக முன்வந்து இந்த விவகாரத்தை கையில் எடுத்திருப்பதாக மனித உரிமைகள் ஆணையம் கூறியுள்ளது. மேலும், தீவிரவாதிகள் சம்பந்தப்பட்டிருந்தாலும் கூட மனிதாபிமான முறையில், முன்னெச்சரிக்கையுடன் இந்த விவகாரத்தை கையாண்டிருக்க வேண்டும் என்று பாதுகாப்பு படையினரை மனித உரிமைகள் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

    நாகாலாந்து மாநிலம், மோன் மாவட்டத்தில் நேற்று முன்தினம் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போது, வாகனத்தில் இருந்த 8 பேரில் 6 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த இருவர் அருகில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    Also Read : ஐக்கிய முற்போக்கு கூட்டணி இப்போது இல்லை.. பாஜகவுக்கு எதிராக காங்கிரஸை கழற்றிவிட்டு கூட்டணி அமைக்கும் மம்தா
     இந்த தகவல் அறிந்ததும் கிராமத்தினர் ராணுவ முகாமை சுற்றிவளைத்தனர். அப்போது 2 வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. சம்பவம் நடந்த மோன் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடமாடுவதாக ராணுவத்திற்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில்தான் சந்தேகத்திற்கிடமான வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

    துப்பாக்கிச் சூட்டுக்கு பின்னர் நேற்று மாலை 250 பேர் கொண்ட கும்பல் துணை இராணுவமான அசாம் ரைபிள்ஸ்-க்கு சொந்தமான கட்டிடங்கள் மற்றும் வாகனங்களுக்கு தீ வைத்தது. அவர்களை விரட்டுவதற்காக அசாம் ரைபிள்ஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்தார். ஒட்டுமொத்தமாக இந்த துப்பாக்கிச்சூட்டில் மொத்தம் 14 பொதுமக்களும், பாதுகாப்பு படையை சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

    Also Read : எந்நேரமும் வெளிநாட்டிலேயே இருக்க முடியாது - ராகுல் காந்தியை வாரிய மம்தா பானர்ஜி
     இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.16 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மத்திய அரசு ரூ.11 லட்சமும், மாநில அரசு ரூ.5 லட்சமும் வழங்குகின்றன.
    Published by:Musthak
    First published:

    Tags: Human rights Council, Nagaland

    அடுத்த செய்தி