Home /News /national /

நாகாலாந்து துப்பாக்கிச் சூடு எதிரொலி... ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை திரும்பப் பெற வலுக்கும் கோரிக்கை

நாகாலாந்து துப்பாக்கிச் சூடு எதிரொலி... ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை திரும்பப் பெற வலுக்கும் கோரிக்கை

ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம்

ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம்

நாகலாந்து உள்ளிட்ட சில வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் (AFSPA)நடைமுறையில் உள்ளது. இதன்மூலம், மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் முன் அனுமதியின்றி பாதுகாப்பு படையினர் சோதனையிடவும், வாரன்ட் ஏதுமின்றி எவரையும் கைது செய்யவும் முடியும்.

மேலும் படிக்கவும் ...
நாகாலாந்தில் தீவிரவாதிகள் என கருதி பொதுமக்களை காவல்துறையினர் சுட்டுக்கொன்றது மற்றும் அதனை தொடர்ந்து நிகழ்ந்த வன்முறையில் 14 பொதுமக்கள் மற்றும் 1 காவல்துறை அதிகாரி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில்,வடகிழக்கு மாநிலங்களில் நடைமுறையில் உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை (AFSPA) ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

நாகாலாந்து மாநிலத்தின் மோன் மாவட்டம் ஓடிங் பகுதியில் தீவிரவாதிகள்நடமாட்டம் இருப்பதாக கருதிய  சிறப்பு ஆயுதப் படையினர்  அவர்களை பிடிக்க பதுங்கி இருந்தனர். அப்போது, அவ்வழியாக  நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றிவிட்டு வந்த தொழிலாளர்களை தீவிரவாதிகள் என கருதிய சிறப்பு ஆயுதப்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இந்த தாக்குதல் மற்றும் அதனை தொடர்ந்து நிகழ்ந்த வன்முறை சம்பவங்களில்  13 பேர் மற்றும் ஒரு ராணுவ வீரர் என மொத்தம் 14 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் அமலில் உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை திரும்பபெற வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்துள்ளது.

ஏன் AFSPA இயற்றப்பட்டது?

மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் AFSPA பற்றிய குறிப்பில், மாநில அரசுகளும் உள்ளூர் அதிகாரிகளும் பிராந்தியத்தில் ஏற்படும் இடையூறுகளைக் கையாள்வதில் "திறமையற்றவர்கள்" எனக் கண்டறியப்பட்டதாலும் வடகிழக்கு மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு நிலைமையாலும் இச்சட்டம்  1958 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது என்றும் "வன்முறை" இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் வாழ்க்கை முறையாக மாறியது," என்றும் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு கொண்டு வரப்பட்ட சட்டத்தின் கீழ் "பிரச்சனைக்குரிய பகுதிகளில் உள்ள ஆயுதப்படை வீரர்களுக்குசில சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நாகலாந்தில் பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்: மத்திய அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்


மே 1958 இல் அவசர சட்டமாக அறிமுகப்படுத்தப்பட்ட  இச்சட்டம், பாராளுமன்றத்தின் இரு அவைகளாலும் நிறைவேற்றப்பட்டது. பின்னர்,  செப்டம்பர் 1958 இல் ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற்றது.  ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம், 1958 என்ற இந்த சட்டம் தொடக்கத்தில் அருணாச்சல பிரதேசம், அஸ்ஸாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களுக்காக உருவாக்கப்பட்டது. பின்னர், சில மாநிலங்கள் மற்றும் பகுதிகள் அதன் வரம்பிலிருந்து நீக்கப்பட்டன.

AFSPA 1942 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் காலனித்துவ காலகட்டத்தின் கட்டளையை அடிப்படையாகக் கொண்டது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) கூறுகிறது. இது ஆரம்பத்தில் நாகா போராளிகளால் ஆயுதமேந்திய கிளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது, ஆனால் 1972 ஆம் ஆண்டு  மேற்கொள்ளப்பட்ட திருத்தம் ஏழு வடகிழக்கு மாநிலங்களுக்கும் இச்சட்டத்தை விரிவுபடுத்தப்பட்டது, அதே நேரத்தில் பஞ்சாப், 1985 முதல் 1994 வரை மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீரில் 1990 இல் இதேபோன்ற சட்டங்கள்  நடைமுறைப்படுத்தப்பட்டன.

 என்ன அதிகாரங்களை இச்சட்டம் வழங்குகிறது?
AFSPA இன் கீழ், ஒரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தின் சில பகுதிகள் அல்லது முழுமையாகவோ பிரச்சனைக்குரிய பகுதியாக அறிவிக்க முடியும். "எந்தவொரு ஆணையிடப்பட்ட அதிகாரி, வாரண்ட் அதிகாரி, ஆணையிடப்படாத அதிகாரி அல்லது ஆயுதப் படைகளில் சமமான அந்தஸ்தில் உள்ள வேறு எந்த நபரும், சட்டம் ஒழுங்குக்கு பாதிப்பை ஏற்படுத்துவோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தலாம், படைகளை பயன்படுத்தலாம், மரணம் கூட ஏற்படுத்தலாம் ”  என்று  AFSPA இன் பிரிவு 4 கூறுகிறது.

மேலும் படிங்க: நாகாலாந்து துப்பாக்கிச்சூடு விவகாரம் : மத்திய அரசு சார்பாக நாடாளுமன்றத்தில் வருத்தம் தெரிவித்த அமித் ஷா


மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் முன் அனுமதியின்றி பாதுகாப்பு படையினர் சோதனையிடவும், வாரன்ட் ஏதுமின்றி எவரையும் கைது செய்யவும் முடியும். ஆயுதமேந்திய தாக்குதல்கள் செய்யப்பட்ட அல்லது செய்யக்கூடிய அல்லது செய்ய முயற்சிக்கும் எந்தவொரு கட்டமைப்பையும் அல்லது தங்குமிடத்தையும் ராணுவம் அழிக்க முடியும்.

பாதுகாப்புப் படையினரால் "பிரச்சனைக்குரிய பகுதிகளில்" மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு வழக்குத் தொடுப்பதில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக பிரிவு 6 கூறுகிறது. இந்தச் சட்டத்தால் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி செய்யப்படும் அல்லது செய்யப்படுவதாகக் கூறப்படும் எந்தவொரு விஷயத்திலும் நபர்," என்று அது கூறுகிறது.

வடகிழக்கில் AFSPA எங்கே நடைமுறையில் உள்ளது?
மத்திய உள்துறை அமைச்சகம் ஜனவரி 2019 இல் நாடாளுமன்றத்தில் AFSPA அஸ்ஸாம் மற்றும் நாகாலாந்து மாநிலங்கள் மற்றும் மணிப்பூரில் அதன் தலைநகர் இம்பாலின் நகராட்சிப் பகுதியை மட்டும் தவிர்த்து செயல்படுகிறது என்று தெரிவித்தது.

அருணாச்சலப் பிரதேசத்தின் திராப், சங்லாங், லாங்டிங் ஆகிய மூன்று மாவட்டங்களிலும், அசாம்  எல்லையில் உள்ள அருணாச்சலப் பிரதேசத்தின் மாவட்டங்களில் உள்ள எட்டு காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளிலும் இந்தச் சட்டம் அமலில் இருப்பதாகக் கூறப்படுகிறது.


AFSPA ஏன் விமர்சிக்கப்படுகிறது?மனித உரிமை மீறல்களைத் தூண்டும் ஒரு "கடுமையான" நடவடிக்கையாக AFSPA திரும்பப் பெற வேண்டும் என்று வடகிழக்கு மாநிலங்களில் சமூக குழுக்கள், அரசியல் கட்சிகள்  நீண்ட காலமாக அழைப்பு விடுத்து வருகின்றன. நாகாலாந்து பொதுமக்கள் படுகொலைகளைத் தொடர்ந்து, மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா திங்களன்று "AFSPA ரத்து செய்யப்பட வேண்டும்" என்று ஒரு ட்வீட்டில் கூறினார், அதே நேரத்தில் நாகாலாந்தின் முக்கியமான உரிமைகள் அமைப்பான நாகா தாய்மார்கள் சங்கம் (NMA) " ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தின் கீழ்தொடர்ந்து வரும் இராணுவமயமாக்கல் மற்றும் கொலைகளுக்கு எதிராக மீண்டும் குரல் கொடுத்துள்ளது. 

சுட்டு கொல்லுதல்,  வலுவான காரணம் இல்லாத குற்றச்சாட்டுக்கெல்லாம் கைது செய்வது, வாரண்டு இல்லாமல் சோதனை நடத்துவது, கட்டுமானங்களை இடிப்பது போன்ற அதிகாரங்களை இச்சட்டம் வழங்குவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம்  கூறுகிறது. மேலும், இது துஷ்பிரயோகம், பாலியல் பலாத்காரம், சித்திரவதை ஆகியவற்றுக்கு இட்டு செல்வதாகவும் தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது.

மத்திய அரசு என்ன சொல்கிறது?

ஓட்டிங்கில் பொதுமக்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டரில், “மாநில அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்ட எஸ்ஐடி இந்த சம்பவத்தை முழுமையாக விசாரிக்கும், இறந்த குடும்பங்களுக்கு நீதியை உறுதி செய்யும்” என்று பதிவிட்டுள்ளார்.

நாகாலாந்து முதலமைச்சர் நெய்பியு ரியோ , மிகவும் கண்டிக்கத்தக்க இந்த சம்பவம் குறித்து விசாரிக்கப்படும், சட்டத்திற்கு உட்பட்டு நீதி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
Published by:Murugesh M
First published:

Tags: Central govt, Nagaland

அடுத்த செய்தி