கொரோனா காரணமான ஊரடங்கால் பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பெங்களூருவில் பூட்டியிருக்கும் வீடு ஒன்றின் முன் மாடு ஒன்றுடன் கலைஞர் ஒருவர் நாதஸ்வரம் வாசிக்கும் வீடியோ அண்மையில் வேகமாக பரவியது.
தேர்ந்த கலைஞராக அவர் நாதஸ்வரம் வாசிக்கும் அந்த வீடியோ ஏராளமானோரால் பகிரப்பட்டதுடன் பல்லாயிரம் பேரால் பார்த்து ரசிக்கப்பட்டது.
அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்த இசையமைப்பாளர் ஜி.பி.பிரகாஷ், இவரைப் பற்றிய தகவல் தெரிந்தால் தெரிவிக்குமாறும், தனது படத்தில் அவரை பயன்படுத்த விரும்பவதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில், அவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள உத்தரஹள்ளியைச் சேர்ந்த நாராயண பொலினோயனா என நியூஸ் 18 கன்னடா தொலைக்காட்சி மூலம் தெரியவந்துள்ளது.
Read More : பிள்ளைகளுக்கு வாழ்க்கையை கற்றுக்கொடுங்கள்... அடிதாங்கும் கல்தான் சிற்பமாகிறது!
கர்நாடக கலைஞர்கள் சங்கத்தில் அவர் இணையவும் அதன் மூலம் அச்சங்கம் மற்றும் அரசாங்கத்தின் உதவிகள் அவருக்கு கிடைக்கவும் நியூஸ் 18 தொலைக்காட்சி ஏற்பாடுகளை செய்துள்ளது.
Must Read : சாலையோரம் நாதஸ்வரம் வாசிப்பவரை கண்டறிய உதவி கேட்கும் ஜி.வி.பிரகாஷ்!
வறுமையில் வாடும் நாராயணாவின் குடும்பத்திற்கு கலைஞர்கள் சங்கம் மூலமாக அடுத்த இரு மாதத்திற்கான உணவு தானியங்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்தத தகவலை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உடன் நியூஸ் 18 பகிர்ந்து கொண்ட நிலையில் அவரை சென்னைக்கு அழைத்து தனது அடுத்த படத்தில் பயன்படுத்திக் கொள்வதாக ஜி.வி.பிரகாஷ் உறுதி அளித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Social media, Video gets viral