நகை கடன் முறையாக செலுத்திய விவசாயிகளுக்கு, நகை கடன்களுக்கான 7 சதவீத வட்டியில் 3 சதவீதம் மானியமாக வழங்க நபார்டு வங்கி சார்பில் அனைத்து வங்கிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
நாட்டின் பிரதான தொழிலாகத் திகழ்வது விவசாயம். இந்தத் தொழில் தொய்வின்றி நடைபெற வேண்டும் என்ற நோக்கத்தில் விவசாயிகள் அவ்வப்போது பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொழில் செய்து வருகின்றனர். அதன்படி, விவசாய கடன், விவசாய தொழில்களுக்கான பல்வேறு மானியம் என அரசு வழங்கி வருகின்றது.
இந்நிலையில், விவசாயிகளுக்காக, 7 சதவீத வட்டியில், விவசாய நகை கடன் வழங்கப்படுகிறது. இதனை முறையாக திரும்ப செலுத்துவோருக்கு, மானியம் வழங்கப்படுகிறது. விவசாய நகை கடனுக்கான வட்டி விகிதத்தில் 5 சதவீதத்திற்கான வட்டி தொகையை வங்கிகளுக்கு, மத்திய அரசு வழங்குகிறது. ஆனால் கடந்த 2019ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையில் அதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை. எனவே, கடந்த 2019ஆம் ஆண்டு முதல் விவசாய நகை கடன்களுக்கு வழங்கப்பட்ட மானியம் நிறுத்தப்பட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதற்கிடையில்
கொரோனா 2ஆவது அலை காரணமாக விவசாய நகை கடன்களை முறையாக செலுத்த முடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
நோய் பரவல் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் பல்வேறு வகையில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் விவசாயிகள் முறையாக வட்டி கட்ட முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் இம்மாதம் (ஜூன்) 30ஆம் தேதி வரையிலான தேதிகளில் நகை கடன்களுக்கான 7 சதவீத வட்டியில் 3 சதவீதம் மானியமாக வழங்க நபார்டு வங்கி சார்பில் அனைத்து வங்கிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
Must Read : கட்டுப்பாடுகளை தளர்த்துவது பேரழிவை ஏற்படுத்தும் - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
அதன்படி, நகை கடனை முறையாக செலுத்தியவர்களுக்கு இந்த மாத இறுதிக்குள் 3 சதவீத வட்டித்தொகை மானியமாக, அவர்களது வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்படும் என்று நபார்டு வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.