விமானநிலையத்தில் சாதாரணப் பயணிகளைப் போல சந்திரபாபு நாயுடுவுக்கும் சோதனை!
சந்திரபாபு நாயுடுவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வரும் நிலையிலும், அவருடைய வாகன் நேரடியாக விமானம் இருக்கும் இடம் வரை அனுமதிக்கப்படவில்லை.

சந்திரபாபு நாயுடு
- News18
- Last Updated: June 15, 2019, 4:19 PM IST
ஆந்திர மாநிலம் கன்னாவாரம் விமானநிலையத்தில் அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் இந்தியாவின் மூத்த தலைவருமான சந்திரபாபு நாயுடு கடும் சோதனைகளுக்குப் பிறகே அனுமதிக்கப்பட்டார். இந்தச் சம்பவம் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற்ற நிலையில், ஆந்திராவில் சட்டப் பேரவைத் தேர்தலும் நடைபெற்றது. சட்டப் பேரவைத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றது. அதனால், சந்திரபாபு நாயுடு ஆட்சியை இழந்தார்.
மக்களவைத் தேர்தலிலும், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி பெரும்தோல்வியைச் சந்தித்தது. அதனையடுத்து, சந்திரபாபு நாயுடுவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. சந்திரபாபு நாயுடு, தற்போதும் இசட் ப்ளஸ் பாதுகாப்பில் இருந்துவருகிறார். இந்தநிலையில், நேற்று கன்னாவரம் பகுதியில் கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் தோல்வி குறித்து ஆலோசனை நடத்தினர். ஆலோசனை முடிந்த பிறகு, அங்கிருந்து ஹைதராபாத்துக்கு சென்றார். அதற்காக கன்னாவரம் விமானநிலையம் சென்றார். சந்திரபாபு நாயுடுவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வரும் நிலையிலும், அவருடைய வாகன் நேரடியாக விமானம் இருக்கும் இடம் வரை அனுமதிக்கப்படவில்லை. பயணிகள் அனைவரும் செல்லும் பேருந்தில் செல்வதற்கு வலியுறுத்தப்பட்டார். மேலும், விமானநிலையத்தில் சாதரண பயணகளுக்கு மேற்கொள்ளப்படும் சோதனைகள் செய்யப்பட்ட பிறகு விமானநிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தெரிவித்த தெலுங்கு தேசம் கட்சியின்செய்தித் தொடர்பாளர் புத்தா வெங்கண்ணா, ‘சமீபத்தில் காவல்துறை, சந்திரபாபு நாயுடுவுக்கு வழங்கப்பட்டு வந்த இரண்டு பாதுகாப்பு வாகனங்களைத் திரும்பப் பெற்றது. அவருடைய வாகனம் விமானநிலையத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. அவரை சோதனை செய்தது என்பது, அதிகாரத்தை காட்டுவதற்காக நடத்தப்பட்டது’ என்று தெரிவித்தார்.
Also see:
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற்ற நிலையில், ஆந்திராவில் சட்டப் பேரவைத் தேர்தலும் நடைபெற்றது. சட்டப் பேரவைத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றது. அதனால், சந்திரபாபு நாயுடு ஆட்சியை இழந்தார்.
மக்களவைத் தேர்தலிலும், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி பெரும்தோல்வியைச் சந்தித்தது. அதனையடுத்து, சந்திரபாபு நாயுடுவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. சந்திரபாபு நாயுடு, தற்போதும் இசட் ப்ளஸ் பாதுகாப்பில் இருந்துவருகிறார்.