Home /News /national /

குண்டும் குழியுமான சாலையை சீர் செய்ய 3 லட்ச ரூபாய் செலவு செய்த மைசூர் காவல்துறை அதிகாரி

குண்டும் குழியுமான சாலையை சீர் செய்ய 3 லட்ச ரூபாய் செலவு செய்த மைசூர் காவல்துறை அதிகாரி


குண்டும் குழியுமான சாலையை சீர் செய்ய 3 லட்ச ரூபாய் செலவு

குண்டும் குழியுமான சாலையை சீர் செய்ய 3 லட்ச ரூபாய் செலவு

காவல் அதிகாரி துரைசுவாமி இதைப் போன்று பல முறை மக்களின் தேவைகளுக்கு செவி சாய்த்து, தகுந்த நடவடிக்கையில் உடனே ஈடுபட்டுள்ளார். இதற்கு முன்னர், மற்றொரு தாலுகாவில் குழி நிறைந்த மற்றொரு சாலையை சரிசெய்ய உதவியுள்ளார்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
மைசூர் காவலர் ஒருவர் குண்டும் குழியுமாக இருந்த சாலையை சீர் செய்ய தன்னுடைய பணம் மூன்று லட்ச ரூபாய் செலவு செய்தார். அது மட்டுமின்றி, பணியாளர்களுடன் இணைந்து சாலையைக் சீரமைக்கும் பணியில் உதவி செய்தார் எஸ். துரைசுவாமி!

இந்திய சாலைகளில் பள்ளங்கள் ஏற்படுவதும், சாலை சீரமைப்புப் பணிகள் சரியான முறையில் நடைபெறாமல் இருப்பதும், குண்டும் குழியுமான சாலையில் விபத்துகள் ஏற்படுவதும் புதிதல்ல. ஒவ்வொரு முறையும், மோசமான நிலையில் உள்ள சாலைகள், அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக தொடர்ந்து விபத்துகள் ஏற்படுத்துவதாக செய்திகள் தெவிரித்துள்ளன.

இந்நிலையில், காவல் அதிகாரி ஒருவர், குண்டும் குழியுமான சாலையை சீர் செய்ய தானே முன்வந்திருப்பதும், அதற்காக 3 லட்ச ரூபாய் செலவு செய்ததும் மிகவும் ஆச்சர்யப்பட வைத்தது.எச்.டி. கோடே தாலுகாவில் உள்ள சிக்காதேவம்மா கோயிலை இணைக்கும் மடபுராவிற்கும் கே.பெலட்டூருக்கும் இடையில் இருக்கும் ஐந்து கி.மீ. சாலை வாகன ஓட்டிகளுக்கும், பாதசாரிகளுக்கும் தொடர்ந்து பிரச்னையை ஏற்படுத்தி வருகின்றன. அதிகாரிகள் மற்றும் சம்மந்தப்பட்ட பிரதிநிதிகளிடம் பலமுறை கோரிக்கைகள் கொடுத்தும், எந்தவொரு பதிலும் கிடைக்கததால், தங்களுக்கு உதவுமாறு காவல்துறை உதவி துணை ஆய்வாளர் எஸ். துறைசுவாமியிடம் உள்ளூர்வாசிகள் கோரிக்கை விடுத்தனர்.

ALSO READ |  ஆச்சர்யம்! ஆனால் அதிசயம் 'உலகின் மிக குள்ளமான குட்டிப்பசு' - வெறும் 50 சென்டி மீட்டர் மட்டும்தான் (படங்கள்)

மக்கள் நண்பன் என்று அழைக்கப்படும் எச்.டி. கோடே காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி துரைசுவாமி, தனது சொந்த செலவிலேயே ரூ.3 லட்சத்தை ரக்ஷனா சேவா அறக்கட்டளைக்கு, மனைவி சந்திரிகாவுடன் வழங்கினார். தொழிலாளர்கள் சாலையை சரிசெய்யும்போது அவர்களுக்கும் உதவியாக இருந்தார். மண்வாரியை எடுத்துக் கொண்டு, கடந்த செவ்வாய்க்கிழமை அன்று தொழிலாளர்களுடன் சாலையை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டதைக் காண முடிந்தது.நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், “இந்தப் பகுதியில் பல விபத்துக்கள் நடந்துள்ளன. சிலர் காயமடைந்தனர். 30க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் இந்த சாலையை தினசரி பயன்படுத்துகின்றனர். சில ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் இதில் இருக்கும் ஆபத்துகளை எனது கவனத்திற்கு கொண்டு வந்தனர். என்னை பங்களிக்கத் தூண்டியதற்கு இதுவே காரணம்." என்று தெரிவித்தார் அதிகாரி துரைசுவாமி.

ALSO READ |  விண்வெளிக்கு செல்லும் இங்கிலாந்தின் பெரும் கோடீஸ்வரர் ரிச்சர்ட் பிரான்சனுக்கும் கடலூருக்கும் என்ன தொடர்பு?

காவல் அதிகாரி துரைசுவாமி இதைப் போன்று பல முறை மக்களின் தேவைகளுக்கு செவி சாய்த்து, தகுந்த நடவடிக்கையில் உடனே ஈடுபட்டுள்ளார். இதற்கு முன்னர், மற்றொரு தாலுகாவில் குழி நிறைந்த மற்றொரு சாலையை சரிசெய்ய உதவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.ஏற்கனவே மக்களின் நண்பன் போலீசார் என்று நினைக்கும் அளவுக்கு இந்த காவல் அதிகாரி பாராட்டுக்குரிய பல செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அவற்றில் முக்கியமானது, தாய் தந்தை இருவரையும் இழந்த இரண்டு சிறுமிகளையும் இவர் தத்தெடுத்திருப்பது.

ALSO READ |  2 குழந்தைகளுக்கு அதிகமுள்ள பெற்றோருக்கு கட்டுப்பாடு விதிக்கும் மசோதா - உத்தரப் பிரதேசத்தில் சர்ச்சை

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Mysuru

அடுத்த செய்தி