பிரதமரின் ஹெலிகாப்டரில் இருந்து இறக்கிய ‘மர்ம பெட்டியில்’ இருந்தது என்ன?

இந்த மர்ம பெட்டியில் இருந்தது என்ன என்பது விசாரிக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

News18 Tamil
Updated: April 14, 2019, 8:46 AM IST
பிரதமரின் ஹெலிகாப்டரில் இருந்து இறக்கிய ‘மர்ம பெட்டியில்’ இருந்தது என்ன?
ஹெலிகாப்டரில் இருந்து கொண்டு செல்லப்படும் பெட்டி
News18 Tamil
Updated: April 14, 2019, 8:46 AM IST
பிரதமரின் ஹெலிகாப்டரில் இருந்து பெட்டி ஒன்று இறக்கி தனியாக ஒரு காரில் ஏற்றப்பட்டது. அந்த பெட்டியில் இருந்தது என்ன என்பது குறித்து சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்திற்கு தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் வந்தார்.

அப்போது, அந்த ஹெலிகாப்டரில் இருந்து ஒரு பெரிய பெட்டி இறக்கப்பட்டு தனியாக நின்றிருந்த கார் ஒன்றில் ஏற்றப்பட்டது.

இந்த காட்சிகள் கொண்ட வீடியோவை காங்கிரஸ் கட்சி வெளியிட்டு கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த மர்ம பெட்டியில் இருந்தது என்ன என்பது விசாரிக்கப்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், விளக்கம் அளித்த போலீஸ் அதிகாரி, அந்த பெட்டியில் பிரதமரின் பாதுகாப்பு கருவிகள் இருந்ததாகவும், அதனை அதிகாரிகள் ஹெலிகாப்டரில் இருந்து இறக்கி வேறு காரில் ஏற்றி சென்றதாகவும் தெரிவித்தார்.

தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 வீடியோ:


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
First published: April 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...