• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • டெல்லியில் தமிழகத்தை சேர்ந்த பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு!

டெல்லியில் தமிழகத்தை சேர்ந்த பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

டெல்லி லாஜ்பத் நகர் பகுதியில் வீட்டு வேலை செய்து வந்த தமிழ்ப்பெண் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

  • Share this:
    டெல்லியில் அழகு நிலையம் நடத்தி வருபவரின் வீட்டில் வேலை செய்து வந்துள்ளார் கள்ளக்குறிச்சியை சேர்ந்த லட்சுமி (21). காலையில் 7 மணி அளவில் வீட்டில் இருந்து புறப்பட்டு ஜல்விஹார் பகுதிக்கு வேலைக்கு வந்துள்ளார்.

    சரியாக 8.30 மணி அளவில் அவர் மர்மமான முறையில் வேலை செய்துவந்த வீட்டின் குளியல் அறையில் எறிந்த நிலையில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் உரிமையாளரை பொறுத்தவரை மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என தெரிவித்தார். ஆனால் மின்சாரம் தாக்கியதற்கு எந்த தடையமும் இல்லை. அவரது உடல் முழுமையாக தீயில் எறிந்திருக்கிறது.

    இவருக்கு அடுத்த மாதம் திருமணம் நடக்கவிருந்த நிலையில் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். எனவே அவர் இறப்பில் மர்மம் இருக்கிறது என்று தமிழர்கள் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: