Home /News /national /

மணிதர்களுக்கு அதிகம் தென்படாத அரிய வகை சிறுத்தை நாகாலந்தில் கண்டுபிடிப்பு!

மணிதர்களுக்கு அதிகம் தென்படாத அரிய வகை சிறுத்தை நாகாலந்தில் கண்டுபிடிப்பு!

Clouded Leopard

Clouded Leopard

வேட்டை நடவடிக்கைகளால் இவ்வகை சிறுத்தைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இவை மனிதர்களின் கண்களில் தென்படுவது மிகவும் அபூர்வம் எனவும் கூறப்படுகிறது.

    மிகவும் அரிய வகை விலங்கு என பட்டியலிடப்பட்ட மேகமூட்ட சிறுத்தை (clouded leopard) நாகாலாந்தில் முதல் முறையாக தென்பட்டுள்ளது. ஆராய்ச்சியாளர்களால் காட்டுப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த டிராப் கேமராவில் இந்த விலங்கின் புகைப்படம் பதிவாகியுள்ளது,

    உயர்ந்த மலைத் தொடர்களையும், அடர்ந்த வனப்பகுதிகளையும் உள்ளடக்கிய வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில், கடல் மட்டத்தில் இருந்து 3700 மீட்டர் உயரத்தில், கிராம பஞ்சாயத்தால் நிர்வகிக்கப்படும்  காட்டுப்பகுதியில் அரிய வகை மேகமூட்ட சிறுத்தையின் நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேகங்கள் போன்ற கோடுகளுடன் கூடிய உருவ அமைப்பை பெற்றுள்ள இவ்வகை சிறுத்தைகள் அழிந்து வரும் வனவிலங்குகளின் பட்டியலில் இருப்பவை. மிக சொற்ப எண்ணிக்கையில் இருக்கக் கூடிய இந்த சிறுத்தைகள் இமாலயத் தொடரிலும், தெற்கு சீனா பகுதிகளிலும், சிங்கப்பூர், தைவான், ஹைனன் தீவுகள், வியட்நாம், தாய்லாந்து, மலேசியா, நேபாளம், பூடான், மியான்மர் உள்ளிட்ட நாடுகளில் காணப்படுகின்றன.

    Also read:  மைக் ஆன்-ல் இருந்தது தெரியாமல் ரகசியம் பேசி சிக்கிய பாஜக எம்.பி..

    வேட்டை நடவடிக்கைகளால் இவ்வகை சிறுத்தைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இவை மனிதர்களின் கண்களில் தென்படுவது மிகவும் அபூர்வம் எனவும் கூறப்படுகிறது. இந்தியாவில் மிக குறைந்த முறையே இந்த சிறுத்தையை பார்த்ததாக தகவல்கள் இருக்கிறது. ஆனால் நாகாலாந்து மாநிலத்தில் இந்த சிறுத்தை தென்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.

    ஆராய்ச்சியாளர்கள் குழு சார்பில் கிப்பிரி மாவட்டத்தில் உள்ள தனமிர் எனும் கிராமத்தில், சரமதி மலைப்பகுதியில், கிராம நிர்வாகத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள வனப்பகுதியில் இந்திய வனவிலங்கு பாதுகாப்பு சங்கம் என்ற அமைப்பினரால் நிறுவப்பட்டுள்ள டிராப் கேமராக்களில் சிலவற்றில் இதனுடைய நடமாட்டம் தென்பட்டுள்ளது. அந்த கேமராவில் அச்சிறுத்தையின் புகைப்படம் பதிவாகி இருக்கிறது.நடுத்தர எடையுடைய இவ்வகை சிறுத்தைகள் மின்னல் வேகத்தில் மரங்களில் ஏறக்கூடியவை.

    Also read:  இந்தியாவில் முதல் முறையாக வாட்டர் டேக்ஸி சேவை - பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்

    இது குறித்து இந்திய வனவிலங்கு பாதுகாப்பு சங்கத்தினர் கூறுகையில், நாங்கள் பொருத்தியிருந்த டிராப் கேமராக்கள் மூலம் இரண்டு வளர்ந்த மேகமூட்ட சிறுத்தைகளும் மற்றும் இரண்டு குட்டிகளும் இப்பகுதியில் நடமாடி வருவது பதிவாகி இருக்கிறது. நாட்டின் பல மாநிலங்களிலும் பொதுவாகவே காடுகள் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. ஆனால் வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் பெரும்பாலான காடுகள் கிராம பஞ்சாயத்தினரால் நிர்வகிக்கப்படுகின்றன. இது பல்லுயில் பெருக்கத்தில் முக்கிய கோட்பாடாக உள்ளது. எங்களுக்கு கிடைத்துள்ள ஆவணத் தகவல்களைக் கொண்டு மேகக்கூட்ட சிறுத்தைகளின் வாழ்வியல் குறித்து புரிந்து கொண்டு செயல்பட உதவும் என தெரிவித்தார்.
    Published by:Arun
    First published:

    Tags: Leopard, Nagaland

    அடுத்த செய்தி