முகப்பு /செய்தி /இந்தியா / ஆதாரத்தின் அடிப்படையிலேயே பிரதமர் குறித்து பேசினேன்.. ராகுல் காந்தி பதில்

ஆதாரத்தின் அடிப்படையிலேயே பிரதமர் குறித்து பேசினேன்.. ராகுல் காந்தி பதில்

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

பிரதமர் மோடி குறித்த பேச்சு தொடர்பாக பிப்ரவரி 15ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க ராகுல் காந்திக்கு மக்களவைச் செயலாளர் உத்தரவிட்டிருந்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

பிரதமர் நரேந்திர மோடி - தொழிலதிபர் அதானி குறித்து ஆதாரங்களின் அடிப்படையிலேயே மக்களவையில் கருத்து தெரிவித்ததாக, உரிமை மீறல் நோட்டீஸ்-க்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பதிலளித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்ற நிலையில், பிப்ரவரி 7ஆம் தேதி அன்று மக்களவையில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடியும், அதானியும் ஒன்றாக இருந்த படம் ஒன்றை காட்டி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதானியின் வளர்ச்சிக்கு பிரதமர் மோடியே காரணம் என்றும் காட்டமாக விமர்சித்தார். இந்த உரையின் போது பிரதமர் மோடி குறித்து அவதூறான கருத்துக்களை பேசியதாக ராகுல் காந்திக்கு எதிராக, பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கினார்.

இதைத் தொடர்ந்து பிரதமர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டை ராகுல்காந்தி முன்வைத்ததாக, பாஜக எம்பி நிஷிகாந்த் துபே மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆகியோர், மக்களவை செயலாளரிடம் உரிமை மீறல் நோட்டீஸ் அளித்தனர். இதுகுறித்து பிப்ரவரி 15ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க ராகுல் காந்திக்கு மக்களவை செயலாளர் உத்தரவிட்டிருந்தார்.

இதுதொடர்பாக மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ள ராகுல் காந்தி, தமது கருத்தில் எந்த தவறும் இல்லை என்றும்,

பிரதமர் மோடி - அதானி தொடர்பான ஆதாரங்களை முன்வைக்க தயார் என்றும் கூறியுள்ளார். ஒவ்வொரு கேள்விக்கும் புள்ளி விவரங்களின் படி தனித்தனியாக பதிலளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

First published:

Tags: BJP, Congress, PM Modi, Rahul gandhi, Tamil News