Home /News /national /

இஸ்லாமிய மக்கள் என்னுடன் எப்படி உறவு கொண்டுள்ளனரோ அதேபோல நான் அவர்களுடன் உறவுகொண்டுள்ளேன் - யோகி ஆதித்யநாத்

இஸ்லாமிய மக்கள் என்னுடன் எப்படி உறவு கொண்டுள்ளனரோ அதேபோல நான் அவர்களுடன் உறவுகொண்டுள்ளேன் - யோகி ஆதித்யநாத்

யோகி ஆதித்யநாத்

யோகி ஆதித்யநாத்

இஸ்லாமியர்கள் என் மீது எப்படி உறவு கொண்டுள்ளனரோ அதே உறவை நானும் அவர்கள் மீது கொண்டுள்ளேன் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

    உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஏழு கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. உத்தரப் பிரசேத்தில் ஆட்சியைத் தக்கவைப்பதற்கு பா.ஜ.க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறது. இந்தநிலையில், இன்று வேட்புமனுத் தாக்கல் செய்த யோகி ஆதித்யநாத் நியூஸ்18-க்கு சிறப்பு பேட்டியளித்தார் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத். அப்போது பேசிய அவர், ‘பா.ஜக எந்த குறிப்பிட்ட மதத்துக்கு எதிரான கட்சி அல்ல. ஆனால், குறிப்பிட்டவர்களுக்கு பணிந்துபோகும் அரசியலை எதிர்கிறோம்.

    என்னுடைய அமைச்சரவையில் இஸ்லாமிய அமைச்சர் இருக்கிறார். மத்திய அமைச்சரவையில் இஸ்லாமிய அமைச்சர் இருக்கிறார். கேரளாவின் ஆளுநராக ஆரிப் முகம்மது கான் இருக்கிறார். நாங்கள் முகத்தைப் பார்க்கவில்லை.


    வளர்ச்சி, நல்லிணகத்தைப் பார்க்கிறோம். நாங்கள் எந்த மதத்துக்கும் எதிரானவர்கள் இல்லை. நாங்கள், தேச விரோதிகளுக்கு எதிரானவர்கள். என்னுடைய ஆட்சியில் பாகுபாடு கிடையாது. மதச்சார்பின்மை என்பது இந்து மதத்தை எதிர்ப்பது கிடையாது.

    Exclusive | மோடிதான் எங்கள் பாதுகாவலர்: அவருடன் கருத்து முரண்பாடு இல்லை- யோகி ஆதித்யநாத்



    மதச்சார்பின்மை என்பது ஒரு மதத்துக்கு சார்பாக செல்வது கிடையாது. 80:20 என்ற என்னுடைய பேச்சு வளர்ச்சி, பாதுகாப்பை விரும்பும் மக்களுக்கும், வன்முறை மற்றும் காட்டாச்சியை விரும்பும் மக்களுக்கும் இடையேயானது. வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம், பெண்கள் பாதுகாப்பை விரும்பும் 80 சதவீத மக்கள் எங்களுடைய திட்டத்தால் பயனடைந்துள்ளனர். குற்றச் செயல்கள் ஈடுபட விரும்பும் 20 சதவீத மக்கள் எங்களுடைய அரசு திட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: BJP, Yogi adityanath

    அடுத்த செய்தி