ஹோம் /நியூஸ் /இந்தியா /

'என் மரணம் உனக்கு திருமண பரிசு..!' கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை

'என் மரணம் உனக்கு திருமண பரிசு..!' கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை

மாதிரி படம்

மாதிரி படம்

Suicide : காதலிக்கு திருமணம் நிச்சயமான விரக்தியில் இளைஞர் ஒருவர் எனது மரணம் தான் உனது திருமண பரிசு என எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  சத்தீஸ்கர் மாநிலம் போலாட் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காதலி பிரிந்ததாதல் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக பலோட் மாவட்டட காவல்துறை தெரிவித்ததாவது, உயிரிழந்த நபர் நீண்ட காலமாக அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணுக்கு சமீபத்தில் வேறு ஒரு நபருடன் திருமணம் நிச்சயமாகியுள்ளது.

  இந்த தகவல் அறிந்த இளைஞர் மிகுந்த மன வேதனைக்கு ஆளாகி, தனது நண்பர்களிடம் இது குறித்து புலம்பி வந்துள்ளார். இந்நிலையில், அந்த இளைஞர் தனது அறையில் உள்ள சுவரில், 'எனது மரணம் தான் உனது திருமண பரிசு, ஐ லவ் யூ' என எழுதி வைத்து விட்டு, அறைக்குள் தற்கொலை செய்துகொண்டார்.ட்

  தான் தற்கொலை செய்து கொள்வதை வீடியோவாக எடுத்து வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸாகவும் வைத்துள்ளார். இதை பார்த்த அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக அந்த இளைஞரின் வீட்டிற்குள் காவல்துறை சென்ற நிலையில், அவர் உயிரிழந்த நிலையில் சடலமாக இருந்துள்ளார். உடலை கைப்பற்றி காவல்துறை அதை உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பியுள்ளது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

  இதையும் படிங்க: கடந்த 10 ஆண்டில் நாடு முழுவதும் 17 லட்சம் பேருக்கு HIV பாதிப்பு - RTI மூலம் தகவல்

  இது தொடர்பாக பலோட் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரதீக் சதுர்வேதி கூறுகையில், "உடற்கூறு ஆய்வு முடிவுகளுக்காக காத்திருக்கிறோம். வாட்ஸ்ஆப்பில் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோ குறித்து விசாரித்து வருகிறோம். விசாரணையில் கிடைக்கும் தகவலை வைத்து அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொள்வோம்" என்றுள்ளார்.

  மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

  Published by:Kannan V
  First published:

  Tags: Love failure, Suicide