ஹோம் /நியூஸ் /இந்தியா /

காரில் சிக்கியபடி 4 கிமீ தூரம்.. நிர்வாண கோலம்.. டெல்லி இளம்பெண் மரணத்தில் நடந்தது என்ன?

காரில் சிக்கியபடி 4 கிமீ தூரம்.. நிர்வாண கோலம்.. டெல்லி இளம்பெண் மரணத்தில் நடந்தது என்ன?

டெல்லி

டெல்லி

கார் விபத்தில் உயிரிழந்த தனது மகளின் உடலை இன்னும் தனக்கு கண்ணில் காட்டவில்லை என டெல்லி இளம் பெண்ணின் தாயார் கூறியுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Delhi, India

டெல்லியில் நள்ளிரவு நேரத்தில் இளம்பெண் ஒருவர் விபத்துக்குள்ளாகி அந்த வாகனத்தில் சிக்கி சுமார் 4 கிலோமீட்டர் தூரம் நிர்வாண கோலத்தில் இழுத்துச் செல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி மகளிர் ஆணையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கண்டக்குரல்கள் எழுப்பியுள்ளன.

சம்பவ நாளான புத்தாண்டு இரவில் அந்த 20 வயதான இளம்பெண் தனது ஸ்கூட்டியில் வேலை நிமித்தமாக வெளியே சென்றுள்ளார். நள்ளிரவு நேரத்தில் அவர் வீடு திரும்பிய போது ஒரு மாருதி பொலேனோ காருடன் அந்த ஸ்கூட்டி மோதி விபத்துக்குள்ளானது. அந்த காரில் வந்த 5 பேரும், காரை நிறுத்தாமல் வேகமாக சென்றுள்ளனர். அப்போது விபத்தில் சிக்கிய அந்த பெண்ணின் ஆடை அவர்களது காரில் சிக்கியுள்ளது. கார் நிற்காமல் சென்றதால், அந்த பெண்ணின் ஆடை கிழிந்தால், அவர் நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்டுள்ளார்.

இந்த அதிர்ச்சி சம்பவத்தை பார்த்து ஒருவர் அதிகாலை சுமார் 3 மணி அளிவில் காவல்துறைக்கு புகார் தந்துள்ளார். ஆனால் கார் வேகமாக சென்றதால் வாகனத்தை கண்டுபிடிக்க அவர்களுக்கு சிக்கலானது. இதையடுத்து சுமார் 4.11 மணிக்கு காவல்துறைக்கு மற்றொரு அழைப்பு வந்தது. அப்போது, ஒரு இளம்பெண்ணின் உடல் கஞ்சவாலா பகுதியில் நிர்வாணமாக இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறை அந்த பெண்ணின் உடலை கைப்பற்றியது.மேலும், அந்த காரில் சென்ற தீபக் கண்ணா, அமித் கண்ணா, கிரிஷன், மித்துன், மனோஜ் மிட்டல் என 5 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.

இதையும் படிங்க: பப்ளிசிட்டிக்காக உயிர்பலியா? கட்சி கூட்டத்தில் நசுங்கி பலியாகும் மக்கள் - ஆந்திராவில் அடித்துக்கொள்ளும் கட்சிகள்!

இந்த சம்பவத்திற்கு டெல்லி மகளிர் ஆணையம் அதிர்ச்சி தெரிவித்துள்ளது. மேலும், விரிவான விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய டெல்லி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை நேர்ந்துள்ளதா என்ற கோணத்திலும் விசாரிக்க மகளிர் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், உயிரிழந்த பெண்ணின் குடும்ப விவரம் வெளியாகியுள்ளது. இவர் தான் குடும்பத்தின் மூத்த பிள்ளை ஆவார். பெண்ணின் தந்தை சில ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார். பெண்ணுக்கு 4 தங்கைகள், 2 தம்பிகள் உள்ளனர்.

பெண்ணின் வேலைக்கு சென்று குடும்பத்திற்காக வருவாய் ஈட்டி வருகிறார். தனது மகளின் அதிர்ச்சி மரணம் குறித்து அவரது தயார் அளித்த பேட்டியில், "எனது மகள் தான் எனக்கு எல்லாம். நேற்று வழக்கம் போல வேலைக்கு சென்றார். மாலை 5.30 மணிக்கு வேலைக்கு சென்று 10 மணிக்கெல்லாம் வீடு திரும்பிவிடுவார். அதிகாலை தான் எனக்கு விபத்து குறித்து தகவல் தந்தார்கள். ஆனால், உடலை கூட இன்னும் கண்ணில் காட்டவில்லை" என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள பெண்ணின் மாமா, இது விபத்தாக இருக்காது என்றும்,  அந்தக்கும்பல் வேண்டுமென்றே இந்த சம்பத்தை செய்திருக்கும் என்றும் சந்தேகம் கிளப்பியுள்ளார். இந்நிலையில் சம்பவம் தொடர்பாக துரித விசாரணை நடத்தப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

First published:

Tags: Accident, Car accident, Delhi