கங்கா விலாஸ் கப்பல், உலகின் நீளமான நதி வழியில் செல்லும் கப்பல் ஆகும். இதனின் முதல் பயணத்தை ஜனவரி 13 ஆம் நாள் பிரதமர் மோடி வாரணாசியில் இருந்து தொடங்கி வைத்த நிலையில் 50 நாட்களில் 3,200 கிமீ தூரம் பயணித்து பிப்ரவரி 28 ஆம் தேதி திப்ருகரில் நிறைவு செய்துள்ளது.
இதனின் பாதையில் 5 மாநிலங்களைக் கடந்து 27 நதி வழிகளில் பயணம் செய்து வந்துள்ளது. திப்ருகரில் வந்தடைந்த கப்பலைத் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறையில் மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால், அமைச்சர்கள் ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக் மற்றும் ராமேஷ்வர் டெலி ஆகியோர் வரவேற்றனர்.
கங்கா விலாஸ் கப்பல் பயண வழியில் உத்திர பிரதேசம், பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்காளம், ஆசாம் ஆகிய 5 மாநிலங்களைக் கடந்து வங்கதேசத்தின் தாக்கா வழியாக அசாம் மாநிலத்திற்கு வந்தடைந்துள்ளது. இந்த பயணத்தின் சுற்றுலாப் பயணிகள் போது பாரம்பரிய இடங்கள், தேசிய பூங்காக்கல், நதி வழியாக இருக்கும் தொடர்ச்சி மலைகள் போன்றவற்றைப் பார்த்துள்ளனர். மேலும் முக்கிய நகரங்களான பீகாரின் பாட்னா, ஜார்கண்ட்டில் உள்ள சாஹிப்கஞ்ச், மேற்கு வங்காளத்தில் உள்ள கொல்கத்தா, வங்கதேசத்தில் உள்ள தாக்கா மற்றும் அசாமில் உள்ள கவுகாத்தி ஆகிய இடங்களைக் கடந்து வந்துள்ளது.
இந்த சொகுசு கப்பலில் 3 தளங்கள் உடையது. 18 சூட் அறைகளைக் கொண்டது. மேலும் 36 சுற்றுலாப் பயணிகள் வரை இதில் பயணிக்கலாம். தற்போது இதனின் முதல் பயணத்தை நிறைவு செய்த நிலையில் இரண்டாவது பயணத்தை சுவிட்சர்லாந்து சுற்றுலாப் பயணிகள் 32 பேருடன் தொடங்கியுள்ளது.
Also Read : திருமணம் போல லிவ் இன் ரிலேஷன்ஷிப்பை பதிவு செய்ய வேண்டும்.. உச்சநீதிமன்றத்தில் வழக்கு..!
கங்கா விலாஸ் சொகுசு கப்பலில் பயணம் செய்யக் கட்டணமாக ஒரு நாளைக்கு ரூ.25,000 முதல் ரூ.50,000 வரை வசூலிக்கப்படுகிறது. இந்த மொத்த சுற்றுலாவிற்கு ஒரு நபருக்கு ரூ.20 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. அன்டாரா சொகுசு நதி கப்பல்கள் நிறுவனத்தால் இந்த கப்பல் இயக்கப்படுகிறது என்பதால் அவர்களின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் இதற்கான புக்கிங்கை செய்யவேண்டும். தற்போது இந்த கப்பலில் அதனில் இரண்டாவது பயணத்தைத் தொடங்கிய நிலையில் செப்டம்பர் மாதம் தான் அடுத்த பயணத்திற்கு புக் செய்ய முடியும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.