Home /News /national /

49 வழக்குகளை தீர்க்க உதவிய மோப்ப நாய்க்கு சிலை வைத்து கௌரவித்த காவல்துறையினர்..

49 வழக்குகளை தீர்க்க உதவிய மோப்ப நாய்க்கு சிலை வைத்து கௌரவித்த காவல்துறையினர்..


மோப்ப நாய் டிங்கி (நாயின் பெயர்).

மோப்ப நாய் டிங்கி (நாயின் பெயர்).

ஜெர்மன் ஷெப்பர்ட் இனத்தை சேர்த்த டிங்கி, இதுவரை சுமார்-49 க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகளை தீர்க்க காவல்துறைக்கு உதவியுள்ளது. பல்வேறு சிக்கலான வழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க இந்த நாய் உதவியாக இருந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் உள்ள போலீஸ் டாக் ஸ்குவாட்டில் ஒரு உறுப்பினராக இருந்த மோப்ப நாய்தான் ஏ.எஸ்.பி டிங்கி . சிறப்புப் படையில் இருந்த டிங்கி (நாயின் பெயர்), காவல்துறைக்கு செய்த பங்களிப்பிற்காக அதற்கு சிலை வைத்து முசாபர் நகர் காவல்துறையினர் கௌரவப் படுத்தியுள்ளனர்

ஜெர்மன் ஷெப்பர்ட் இனத்தை சேர்த்த டிங்கி, இதுவரை சுமார்-49 க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகளை தீர்க்க காவல்துறைக்கு உதவியுள்ளது. பல்வேறு சிக்கலான வழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க இந்த நாய் உதவியாக இருந்துள்ளது.

இதனிடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மோப்ப நாய் எதிர்பாராத விதமாக உயிரிழந்தது. டிங்கி மரணம் முசாபர்நகர் காவல்துறைக்கு பேரிழப்பு என காவல்துறை அதிகாரிகள் வேதனை தெரிவித்தனர். இந்த நிலையில், மோப்ப நாய்க்கு சிலை வைக்கும் முடிவை எடுத்தனர். அதன்படி, காவல்துறை உயரதிகாரிகள் சேர்த்து நாயின் சிலையை திறந்து வைத்துள்ளனர். தற்போது, சிலை திறப்பு படங்களை ஐ.பி.எஸ் அதிகாரி அபிஷேக் யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். உ.பி. காவல்துறையும் அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

மேலும் அந்த படங்களுடன் ஐ.பி.எஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளதாவது, "முசாபர்நகர் போலீசாருடன் இருந்தபோது 49 குற்ற சம்பவங்களை தீர்க்க உதவிய ஏஎஸ்பி டிங்கி, கடந்த 2020-ல் எங்களை விட்டு பிரிந்தது. இன்று (பிப்.6), அதன் படைப்புகள் மற்றும் பங்களிப்புக்காக அவளுக்கு நினைவு சின்னம் வைக்கப்பட்டது. மோப்ப நாய்களை கையாளும் அதிகாரி சுனில் குமாரால் சிலை திறக்கப்பட்டது, ”என்று கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார். கடந்த பிப்.6ம் தேதி வெளியிடப்பட்ட இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. நெட்டிசன்கள் பலரும் அந்த நாய்க்கு ஆழ்ந்த இரங்கலையும், அதன் வீர தீர செயல்களுக்கு பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.


ஏ.எஸ்.பி டிங்கி இறப்பதற்கு முன்பு வரை அதனை கையாண்ட அதிகாரி கான்ஸ்டபிள் மகேஷ் குமார். இவர் சமீபத்தில் தான் பிஜ்னோர் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளார். இவர் மோப்பா நாய் பற்றி கூறியதாவது, " போலீஸ் படையின் ஒரு சிறந்த தலைவருக்கு இது ஒரு சிறந்த அஞ்சலி! நான் விரைவில் ஏ.எஸ்.பி. டிங்கிக்கு மரியாதை செலுத்துவேன்." என தெரிவித்துள்ளார்.

ஜெர்மன் ஷெப்பர்ட் டிங்கி, இறக்கும் போது அதற்கு 8 வயது, மேலும் அது உடல்நலக் குறைவால் இறந்துள்ளது. குவாலியரில் பி.எஸ்.எஃப் அகாடமியில் உள்ள தேசிய நாய் பயிற்சி மையத்தில் இருந்து முசாபர் நகருக்கு ஆட்சேர்ப்பு மூலம் டிங்கி சேர்க்கப்பட்டது. முதலில் கான்ஸ்டபிளாக முசாபர்நகர் காவல்துறையில் சேர்ந்தது. குற்றத்தை முறியடிக்கும் அற்புதமான திறன் மூலம் டிங்கி ஆறு ஆண்டுகளில் ஆறு பதவி உயர்வுகளைப் பெற்றது. இது மோப்ப நாயின் ஒரு சாதனையாக பார்க்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Dog, Statue

அடுத்த செய்தி