மோடி தான் இன்ஸ்பிரேஷன்.. தேநீர் கடை டூ பஞ்சாயத்து தேர்தல்.. களமிறங்கும் பட்டதாரி பெண்

மோடி தான் இன்ஸ்பிரேஷன்.. தேநீர் கடை டூ பஞ்சாயத்து தேர்தல்.. களமிறங்கும் பட்டதாரி பெண்

பஞ்சாயத்து தேர்தலில் களமிறங்கும் பட்டதாரி பெண்

பஞ்சாயத்து தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கும் மீனாட்சி எந்த அரசியல் கட்சியின் ஆதரவையும் எதிர்ப்பார்க்கவில்லை.

 • Share this:
  உத்தரப்பிரதேசம் மாநிலம் முசாஃபர்நகர் பஞ்சாயத்து தேர்தலில் மீனாட்சி என்ற பெண் கிராம தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். உள்ளூரில் டீக்கடை நடத்தி வரும் மீனாட்சி பிரதமர் நரேந்திர மோடிதான் எனக்கு இன்ஸ்பிரேசன் என்கிறார். மீனாட்சி, மீரட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். இவரது கணவர் கயான் சிங் தினக்கூலியாக வேலை செய்து வருகிறார். கயான் சிங் - மீனாட்சி தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவரின் சொற்ப வருமானமும் டீ க்கடையில் வரும் வருமானத்தை நம்பிதான் இவர்களின் வாழ்வாதாரம் உள்ளது.

  உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆர்வமாக உள்ள மீனாட்சி அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.  அவர் போட்டியிடும் சோவாலா கிராம பஞ்சாயத்து ரிசர்வ் பஞ்சாயத்தாக வரையறுக்கப்பட்டது. இங்கு 7,000 வாக்காளர்கள் உள்ளனர்.

  தேசிய ஊரக வாழ்வார திட்டத்தின் கீழ் டீக்கடை வைத்திருக்கும் மீனாட்சி. கடந்த 3 ஆண்டுகளாக இப்பகுதியில் வியாபாரம் செய்து வருகிறார். ” பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்தால் நான் பெரிதும் ஈர்க்கப்பட்டேன். தேநீர் விற்ற ஒருவர் பிரதமராக முடியும் என்றால். ஏன் என்னால் அது முடியாது. ஒரு டீக்கடைகாரர் கிராமப் பஞ்சாயத்து தலைவராக முடியாதா? என்ன.. என மீனாட்சி கேள்வி எழுப்புகிறார். சுயேட்சையாக களமிறங்கும் மீனாட்சி எந்த அரசியல் கட்சியின் ஆதரவையும் எதிர்ப்பார்க்கவில்லை. கிராம மக்களின் முழு ஆதரவு தனக்கு இருப்பதாக மீனாட்சி கூறுகிறார்.

  https://tamil.news18.com/news/national/iim-professor-from-kerala-turned-over-night-inspiration-hrp-446059.html

  மீனாட்சியின் கணவர் கயான் சிங் பேசுகையில், “ 2015-ம் ஆண்டு என்னுடைய மனைவி கிராம பஞ்சாயத்து உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப்பகுதியில் உள்ள மக்கள் மோடி அவர்கள் ஆரம்பத்தில் டீ விற்றார். இப்போது அவர் நாட்டின் பிரதமராக உள்ளார். நீ இந்தப் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட வேண்டும் என்கிறார்கள். மீனாட்சி இப்போது பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு நிற்கிறார்’ என்றார் . கயான சிங் மீனாட்சி தம்பதிக்கு மூன்று குழந்தைகள். தேர்தலில் வெற்றி பெற்றால் கிராம வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என மீனாட்சி தெரிவித்துள்ளார்.
  Published by:Ramprasath H
  First published: