குடியுரிமை திருத்தச் சட்ட போராட்டம் : 53 பேருக்கு 23 லட்சம் மொத்தம் அபராதம்..!

குடியுரிமை திருத்தச் சட்ட போராட்டம் : 53 பேருக்கு 23 லட்சம் மொத்தம் அபராதம்..!
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்
  • Share this:
உத்தரப் பிரதேச மாநிலம் முசாஃபர்நகர் மாவட்டத்தில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடியதாக குற்றம்சாட்டப்பட்டிருக்கும் 53 பேருக்கு மொத்தமாக 23 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக 295 நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, 1.9 கோடி ரூபாய் மொத்தமாக அபராதம் விதிக்கப்பட்டது. நோட்டீஸின் மீதான பதில்கள் பெறப்பட்டு, இப்போது மொத்தம் 53 பேரிடம் இருந்து 23 லட்சம் அபராதத் தொகை வசூலிக்கப்படவேண்டும் என்று தாசில்தாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொது சொத்துக்கு குந்தகம் ஏற்படுத்திய சேதக் கணக்கை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பில் இருக்கும் எனத் தெரிவித்திருந்தது உச்ச நீதிமன்றம். அலகாபாத் உயர்நீதிமன்றம் மாநில அரசிடம் சேதாரக் கணக்குக்கான பொறுப்பினை விதிமுறைகளுடன் அளித்திருக்கிறது. உயர் நீதிமன்றத்தின் இந்த முடிவு அரசின் சார்பு நிலை முடிவுகளுக்கு வழிவகை செய்துள்ளது என சட்ட ஆர்வலர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

”குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு என்ற பெயரில் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், சமாஜ்வாதி, இடதுசாரி கட்சிகள் போன்றவை மொத்த நாட்டையும் தீக்குழியில் தள்ளுகின்றன. சொந்த உடைமைகள் பறிக்கப்பட்டு, அரசின் இழப்பை ஈடுகட்ட அவை ஏலத்தில் விடப்படும்” என உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Also See...
First published: February 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading