முத்தூட் குழும தலைவர் ஜார்ஜ் முத்தூட் காலமானார்!

முத்தூட் குழும தலைவர் ஜார்ஜ் முத்தூட் காலமானார்!

முத்தூட்

2020ம் ஆண்டு ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்ட ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் 26வது இடம் பிடித்தவர் ஜார்ஜ் முத்தூட்

  • Share this:
இந்தியாவின் மிகப்பிரபலமான நிதி நிறுவனமாக விளங்கும் முத்தூட் குழும தலைவர் எம்.ஜி.ஜார்ஜ் முத்தூட் டெல்லியில் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 71.

மறைந்த ஜார்ஜ் முத்தூட்டிற்கு சாரா என்ற மனைவியும், ஜார்ஜ் மற்றும் அலெக்சாண்டர் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். இரண்டாவது மகன் பால் முத்தூட், கடந்த 2009ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார்.

இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினராகவும், மலங்கரா ஆக்ஸ்போர்ட் தேவாலயத்தின் செயலராகவும் இருந்துள்ளார்.

2020ம் ஆண்டு ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்ட ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் 26வது இடம் பிடித்தவர் ஜார்ஜ் முத்தூட்.

இந்தியாவின் மிகப்பெரிய சங்கிலித் தொடர் வணிக நிறுவனமாக விளங்கி வரும் முத்தூட், கேரள மாநிலம் கொச்சியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. தங்க நகைக் கடன், கட்டுமானத்துறை, மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் என 20க்கும் மேற்பட்ட தொழில்களை முத்தூட் நடத்தி வருகிறது. தமிழகத்திலும் முத்தூட் நிறுவனம், மாநிலம் முழுவதும் கிளைகள் பரப்பியுள்ளது.

முத்தூட் நிறுவனங்களை தொடங்கிய முத்தூட் நினன் மத்தாயின் மகன் ஜார்ஜ் முத்தூட்டின் மகனான மத்தாய் ஜார்ஜ் ஜார்ஜ் முத்தூட் கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள கொல்லன்சேரியில் 1939 நவம்பரில் பிறந்தவர்.

மனிப்பால் பல்கலையில் மெக்கானிக்கல் பொறியியல் படித்து முடித்த பின்னர் தன்னுடைய குடும்பத்தொழிலை கவனிப்பதற்காக வந்தார். முத்தூர் நிறுவனத்தில் அலுவலக உதவியாளராக 1979-ல் பணியில் சேர்ந்தார். பின்னர் 1993-ல் நிர்வாக இயக்குனராக உயர்ந்தார்.

ஆரம்பத்தில் மிகப்பெரிய சாம்ராஜ்யமாக இருந்த முத்தூட் குழுமத்தில் 1980களில் சொத்துப் பிரச்சனை காரணமாக அவர்களின் நிறுவனம் இரண்டாக பிரிந்தது. Muthoot Pappachen என்ற குழுமம் தனியாக பிரிந்து முத்தூட் ஃபின்கார்ப்பை தொடங்கியது,

ஜார்ஜ் முத்தூட் நிர்வாக இயக்குனராக ஆன போது வெறும் 31 கிளைகளே இருந்தது. ஆனால் இன்று உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் சேர்த்து 5,500க்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டு ஆலமரமாக வளர்ந்துள்ளது என்றால் அதற்கு காரணம் ஜார்ஜ் முத்தூட் தான்.
Published by:Arun
First published: