முத்தூட் குழும தலைவர் ஜார்ஜ் முத்தூட் மரணத்தில் திடீர் திருப்பம்!: வீட்டின் 4வது மாடியில் இருந்து விழுந்ததால் மரணம்?

முத்தூட் குழும தலைவர் ஜார்ஜ் முத்தூட் மரணத்தில் திடீர் திருப்பம்!: வீட்டின் 4வது மாடியில் இருந்து விழுந்ததால் மரணம்?

ஜார்ஜ் முத்தூட்

முத்தூட் நிறுவனங்களை தொடங்கிய முத்தூட் நினன் மத்தாயின் மகன் ஜார்ஜ் முத்தூட்டின் மகனான மத்தாய் ஜார்ஜ் ஜார்ஜ் முத்தூட் கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள கொல்லன்சேரியில் 1939 நவம்பரில் பிறந்தவர்.

  • Share this:
 

முத்தூட் குழும தலைவர் ஜார்ஜ் முத்தூட் மரணத்தில் திடீர் திருப்பமாக அவர் வீட்டின் 4வது மாடியில் இருந்து விழுந்ததன் காரணமாகவே மரணமடைந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கேரளாவின் கொச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் முத்தூட் குழும தலைவர் ஜார்ஜ் முத்தூட் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் காலமானதாக நேற்று செய்திகள் வெளியான நிலையில் அவரின் மரணத்தின் உண்மையான காரணத்தை டெல்லி காவல்துறையினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.

ஜார்ஜ் முத்தூட் மரணம் தொடர்பாக டெல்லி தென்கிழக்கின் காவல் துணை ஆணையர் மீனா கூறுகையில், அமர் காலனி காவல்நிலையத்தில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு 9.21 மணிக்கு எங்களுக்கு வந்த தொலைபேசி அழைப்பில், கிழக்கு டெல்லியின் கைலாஷ் பகுதியில் உள்ள ஜார்ஜ் முத்தூட் அவரின் வீட்டின் 4வது மாடியில் இருந்து தவறி விழுந்து விட்டதாக தகவல் கிடைத்தது.

உடனடியாக அவர் ஃபோர்டிஸ் எஸ்கார்ட் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் சிகிச்சையின் போது அவர் உயிரிழந்தார். AIIMS மருத்துவமனையில் அவரின் உடல் போஸ்ட்மார்டம் செய்யப்பட்டது. இந்த அறிக்கையின் அடிப்படையில் அவரின் இறப்பில் எந்த தவறும் நிகழவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது என்று காவல் துணை ஆணையர் மீனா தெரிவித்தார்.

71 வயதாகும் ஜார்ஜ் முத்தூட், அவரின் கீழ் இயங்கிவந்த முத்தூட் நிறுவனம் 20க்கும் மேற்பட்ட தொழிகளை நடத்தி வந்தாலும் அவர் டெல்லியிலேயே வசித்து வந்தார். அவரின் தலைமையில் முத்தூட் நிறுவனம் மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யமாக விரிவடைந்தது. இந்தியா மட்டுமல்லாது அயல்நாடுகளிலும் குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளிலும் முத்தூட் நிறுவனங்களில் கிளைகள் திறக்கப்பட்டன.

ஜார்ஜ் முத்தூட் மரணம் தொடர்பாக முத்தூட் குழுமம் வெளியிட்டுள்ள இரங்கல் அறிவிப்பில், ஜார்ஜ் முத்தூட்டின் எதிர்பாராத மரணம் அவருடைய குடும்பத்தினர், ஊழியர்கள், பங்குதாரர்கள் மற்றும் நண்பர்களுக்கு பேரிழப்பாகும். தென் இந்தியாவை கடந்த தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் நிறுவத்தை விஸ்தரித்த பெருமை அவரையே சேரும் என அதில் கூறப்பட்டுள்ளது.

யார் இந்த ஜார்ஜ் முத்தூட்?

இந்தியாவின் மிகப்பெரிய சங்கிலித் தொடர் வணிக நிறுவனமாக விளங்கி வரும் முத்தூட், கேரள மாநிலம் கொச்சியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. தங்க நகைக் கடன், கட்டுமானத்துறை, மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் என 20க்கும் மேற்பட்ட தொழில்களை முத்தூட் நடத்தி வருகிறது. தமிழகத்திலும் முத்தூட் நிறுவனம், மாநிலம் முழுவதும் கிளைகள் பரப்பியுள்ளது.

முத்தூட் நிறுவனங்களை தொடங்கிய முத்தூட் நினன் மத்தாயின் மகன் ஜார்ஜ் முத்தூட்டின் மகனான மத்தாய் ஜார்ஜ் ஜார்ஜ் முத்தூட் கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள கொல்லன்சேரியில் 1939 நவம்பரில் பிறந்தவர்.

மனிப்பால் பல்கலையில் மெக்கானிக்கல் பொறியியல் படித்து முடித்த பின்னர் தன்னுடைய குடும்பத்தொழிலை கவனிப்பதற்காக வந்தார். முத்தூர் நிறுவனத்தில் அலுவலக உதவியாளராக 1979-ல் பணியில் சேர்ந்தார். பின்னர் 1993-ல் நிர்வாக இயக்குனராக உயர்ந்தார்.

ஆரம்பத்தில் மிகப்பெரிய சாம்ராஜ்யமாக இருந்த முத்தூட் குழுமத்தில் 1980களில் சொத்துப் பிரச்சனை காரணமாக அவர்களின் நிறுவனம் இரண்டாக பிரிந்தது. Muthoot Pappachen என்ற குழுமம் தனியாக பிரிந்து முத்தூட் ஃபின்கார்ப்பை தொடங்கியது,

ஜார்ஜ் முத்தூட் நிர்வாக இயக்குனராக ஆன போது வெறும் 31 கிளைகளே இருந்தது. ஆனால் இன்று உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் சேர்த்து 5,500க்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டு ஆலமரமாக வளர்ந்துள்ளது என்றால் அதற்கு காரணம் ஜார்ஜ் முத்தூட் தான்.
Published by:Arun
First published: