ஹோம் /நியூஸ் /இந்தியா /

இந்தியாவை நாம் அனைவரும் ஒன்றுபட்டு காக்க வேண்டும் - கேரளா சிபிஎம் மாநாட்டில் மலையாளத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்!

இந்தியாவை நாம் அனைவரும் ஒன்றுபட்டு காக்க வேண்டும் - கேரளா சிபிஎம் மாநாட்டில் மலையாளத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்!

முதலமைச்சர் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின்

13 ஆண்டு கால பாஜக ஆட்சியில், கூட்டாட்சி அமைப்பு செயல்படும் நிலையைக் கண்டு மாநிலங்கள் விரக்தியடைந்துள்ளதாக அவர் விமர்சித்தார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Thiruvananthapuram, India

  மத்திய அரசு மாநிலங்களின் உரிமைகளை பறித்து வளர்ச்சியை தடுப்பதாக திருவனந்தபுரத்தில் நடைபெற்ற சிபிஎம் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

  கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். இந்த விழாவில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா, கேரள மாநில செயலாளர் ராஜேந்திரன், அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

  இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது உரையை மலையாளத்தில் தொடங்கினார். நான் தமிழ்நாட்டை காக்கின்றேன். இங்கே பினராயி விஜயன் கேரளாவை காக்கின்றார். இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்றால் நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என கூறினார். தொடர்ந்து தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பேசிய அவர், இது பேசுவதற்கான நேரம் அல்ல, செயல்படுவ்தற்கான நேரம் என தெரிவித்தார்.

  13 ஆண்டு கால பாஜக ஆட்சியில், கூட்டாட்சி அமைப்பு செயல்படும் நிலையைக் கண்டு மாநிலங்கள் விரக்தியடைந்துள்ளதாக அவர் விமர்சித்தார். அதிகாரங்கள் பறிக்கப்பட்டு மாநிலங்கள் சாதாரண நகராட்சிகள் போல மாறி வருவதாக குறிப்பிட்ட அவர், அரசியல் சட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

  தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளால் ஏழை, எளிய மக்களின் கல்வி பாதிக்கப்படுவதாக சாடினார். தகுதி இருந்தால்தான் படிக்க வரவேண்டும் எனபது ஏமாற்று வேலை என கூறிய அவர், இது பழமைவாத கருத்துக்களுக்கு முலாம் பூசும் வேலை விமர்சித்தார். தேசிய கல்விக் கொள்கையை, காவிக் கொள்கையாக மத்திய அரசு வடிவமைப்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

  இதையும் வாசிக்க: காங்கிரஸ் தலைவர் போட்டி: மல்லிகார்ஜுன கார்கே vs சசி தரூர்... திரிபாதி மனு தள்ளுபடி

  மேலும், ஒரு நாடு, ஒரு மொழி என அனைத்தும் ஒன்றாக போனால், ஒரே கட்சி என்ற நிலை வந்துவிடும் என்றும், இது மிகவும் ஆபத்தானது என்றும் கூறினார். மாநில மொழிகளை, பண்பாட்டை, உரிமைகளை காப்பாற்றினால் தான் இந்தியா காப்பாற்றப்படும் எனக் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிக அதிகாரங்கள் கொண்ட மாநிலங்களைத்தான் கேட்கிறோமே தவிர பிரிவினையை அல்ல என தெரிவித்தார்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: CM MK Stalin, CPM, Kerala