ஹோம் /நியூஸ் /இந்தியா /

ரூபாய் நோட்டில் கடவுள் லட்சுமி படத்தை சேர்க்க வேண்டும் - மோடிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள்!

ரூபாய் நோட்டில் கடவுள் லட்சுமி படத்தை சேர்க்க வேண்டும் - மோடிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள்!

அரவிந்த் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி உள்ளாட்சி தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சி மாபெரும் வெற்றி பெரும் என பேசிய அவர், நாட்டின் தலைநகரில் இருந்து பாஜக துடைத்தெரியப்படும் என கூறினார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Delhi, India

  புதிய ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்துடன் லட்சுமி, விநாயகர் படங்களையும் சேர்க்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.

  டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “இனி அச்சிடப்படும் புதிய ரூபாய் நோட்டுகளில் ஒருபுறம் மகாத்மா காந்தியின் படமும் மறுபுறம் லட்சுமி மற்றும் விநாயகரின் படங்களையும் சேர்க்க வேண்டும். ரூபாய் நோட்டுகளில் கடவுகளின் படங்களை சேர்ப்பது நாடு செழிக்க உதவும். நாம் என்ன தான் முயற்சி செய்தாலும் கடவுள் அருள் இல்லையென்றால் பலன் அளிக்காது” என பேசினார்.

  கடந்த சில மாதங்களாக இந்திய பொருளாதாரம் நலிவடைந்து வருவதாக தெரிவித்த அவர், இந்தோனேசிய ரூபாயில் விநாயகர் படம் இருப்பதை குறிப்பிட்டார். அவர்கள் ஒரு இஸ்லாமிய நாடு, 80% இஸ்லாமியர்களை கொண்ட நாடு அவர்களால் அதை செய்ய முடியும் என்றால் நம்மாலும் செய்ய முடியும் என குறிப்பிட்டார். மேலும் இது குறித்து 2 நாட்களில் பிரதமருக்கு கடிதம் எழுதவுள்ளதாகவும் தெரிவித்தார்.

  இதையும் வாசிக்க: கோவை கார் வெடிப்பு வழக்கு - என்.ஐ.ஏவுக்கு மாற்ற முதலமைச்சர் பரிந்துரை!

  வரவிருக்கும் டெல்லி உள்ளாட்சி தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சி மாபெரும் வெற்றி பெறூம் என பேசிய அவர், நாட்டின் தலைநகரில் இருந்து பாஜக துடைத்தெரியப்படும் என கூறினார்.

  மேலும் குஜராத் தேர்தல் குறித்து பேசிய அவர், அனைத்து தீய சக்திகளும் எங்களுக்கு எதிராக ஓரணியில் திரண்டுள்ளனர் என குறிப்பிட்டார்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Arvind Kejriwal, PM Modi