ஹிந்துக்கள் வணங்கும் பசுக்களை முஸ்லிம்களும் பாதுகாக்க வேண்டும் – மத்திய அமைச்சர்

news18
Updated: October 6, 2018, 5:15 PM IST
ஹிந்துக்கள் வணங்கும் பசுக்களை முஸ்லிம்களும் பாதுகாக்க வேண்டும் – மத்திய அமைச்சர்
ராம்தாஸ் அத்வாலே
news18
Updated: October 6, 2018, 5:15 PM IST
'ஹிந்துகள் தெய்வமாக வணங்கும் பசுக்களை முஸ்லிம்களும் பாதுகாக்க வேண்டும்' என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு இர்ஃபான் ஷேக் என்பவர் ‘முஸல்மான் அன்ட் யோகி ஆதித்யநாத்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா டெல்லியில் நடைபெற்றது.

விழாவில், அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே பங்கேற்றுப் பேசியதாவது: அண்மைக் காலங்களில் பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்கள் சிலர் தொல்லை அனுபவித்தது உண்மைதான்.


பொதுவாக ஹிந்துக்கள் பசுக்களை தெய்வமாக கருதி வணங்குவர். எனவே,  முஸ்லிம்களும் பசுக்களை பாதுகாக்க முன்வர வேண்டும். இந்தியாவை வலிமையான நாடாக மாற்றுவதற்கு ஹிந்துக்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டியது அவசியம்.

பிரதமர் மோடியும், யோகி ஆதித்யநாத்தும் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் அல்ல. அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் புத்தர் கோயில்தான் இருந்தது. அயோத்தி பிரச்னை (ராமர் கோயில் விவகாரம்) குறித்து உச்ச நீதிமன்றம் இறுதி முடிவெடுக்கும்வரை ஹிந்துக்களும், முஸ்லிம்களும் பொறுமை காக்க வேண்டும் என்றார் ராம்தாஸ் அத்வாலே.
First published: October 6, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...