’இஸ்லாமியர்கள் பாரபட்சத்துடன் காட்டப்படுகின்றனர்’- ஹிந்தி பத்திரிகைகள் மீது குற்றச்சாட்டு

முஸ்லிம்கள் ஒரு மைனாரிட்டி சமூகம் என்பதால் போதுமான நியூஸ் கவரேஜ் இந்த சமூகத்துக்குக் கிடைக்கவில்லை என 84% மக்கள் தெரிவித்துள்ளனர்.

’இஸ்லாமியர்கள் பாரபட்சத்துடன் காட்டப்படுகின்றனர்’- ஹிந்தி பத்திரிகைகள் மீது குற்றச்சாட்டு
மாதிரிப்படம் (PTI)
  • News18
  • Last Updated: April 8, 2019, 6:21 PM IST
  • Share this:
இஸ்லாமிய மக்கள் குறித்து பாரபட்சமாகவும் நியாயமற்ற முறையில் காட்சிப்படுத்துவதும் ஹிந்தி பத்திரிகைகளில் வழக்கமாகி வருவதாக ‘மாஸ் மீடியா’ சர்வே கண்டறிந்துள்ளது.

ஆய்வுப் பத்திரிகையான ‘மாஸ் மீடியா’ நடத்திய சர்வேயில், ஹிந்தி பத்திரிக்கைகள் இஸ்லாமியர்களையும் அவர்கள் குறித்த செய்திகளையும் பாரபட்சத்துடன் வெளியிடுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. டெல்லி மற்றும் ஹரியாணாவில் இந்த சர்வே நடத்தப்பட்டுள்ளது. சுமார் 20-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்கள் வசிக்கும் பகுதிகளில் இந்த சர்வே மேற்கொள்ளப்பட்டது. இந்த சர்வேயில், இஸ்லாமிய மக்களுக்கு எதிராகவே ஹிந்தி செய்திகள் வெளியாகின்றன என 76% மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இஸ்லாமியர்கள் ஒரு மைனாரிட்டி சமூகம் என்பதால், போதுமான நியூஸ் கவரேஜ் இந்த சமூகத்துக்குக் கிடைக்கவில்லை என 84% மக்கள் தெரிவித்துள்ளனர். அதிகமானோர், ‘ஹிந்தி பத்திரிகைகள் இஸ்லாமியர்கள் குறித்து செய்திகள் வெளியிடுவதில்லை. வெளியிட்டாலும் அது எதிரானதாகவே இருக்கிறது’ என்ற கருத்தையே தெரிவித்துள்ளனர்.


மேலும் பார்க்க: 5000 பழங்குடியின பெண்களின் கின்னஸ் சாதனை!தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்