Home /News /national /

திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ1.02 கோடி நன்கொடை அளித்த முஸ்லீம் தம்பதி..!

திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ1.02 கோடி நன்கொடை அளித்த முஸ்லீம் தம்பதி..!

நன்கொடை வழங்கிய இஸ்லாமியர்கள்

நன்கொடை வழங்கிய இஸ்லாமியர்கள்

TIRUPATHI | 15 லட்ச ரூபாயை அன்னதான திட்டத்திற்கும், 87 லட்ச ரூபாயை பத்மாவதி விருந்தினர் மாளிகை புதுப்பிக்கும் பணிக்கும் பயன்படுத்த அவர்கள் கேட்டு கொண்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tirupati | Tirupati NMA
    சென்னையைச் சேர்ந்த இஸ்லாமியர்கள், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ஒரு கோடியே 2 லட்ச ரூபாய் நன்கொடை அளித்துள்ளனர்.

    சென்னையைச் சேர்ந்த சுபினா பானு மற்றும் அப்துல்கனி ஆகியோர் திருப்பதி கோயிலில் ஏழுமலையானை வழிபட்ட பிறகு, அங்குள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டியை சந்தித்தனர்.

    அப்போது ரூ 1.02 கோடி ரூபாய்கான வரைவோலையை நன்கொடையாக வழங்கினர். 15 லட்ச ரூபாயை தினசரி அன்னதான திட்டத்திற்கும், 87 லட்ச ரூபாயை பத்மாவதி விருந்தினர் மாளிகை புதுப்பிக்கும் பணிக்கும் பயன்படுத்த அவர்கள் நிர்வாக அதிகாரியை கேட்டுக் கொண்டனர். மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் நடைபெற்ற இந்த சம்பவம் பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Anupriyam K
    First published:

    Tags: Tirumala Tirupati, Tirupati Devotees, Tirupati temple

    அடுத்த செய்தி