ஆதார் அட்டையைக் காட்டக்கோரி முஸ்லிம் தொழிலாளிக்கு அடி உதை: ம.பி. கிராமத்தில் வன்முறை

முஸ்லிமைத் தாக்கிய நபர்களுக்கு ம.பி. போலீஸ் வலைவீச்சு.

மத்திய பிரதேச மாநிலத்தில் முஸ்லிம் வியாபாரி ஒருவரிடம் ஆதார் அட்டையைக் காட்டக்கோரி அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பாகியுள்ளது.

 • Share this:
  மத்திய பிரதேச மாநிலத்தில் முஸ்லிம் வியாபாரி ஒருவரிடம் ஆதார் அட்டையைக் காட்டக்கோரி அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பாகியுள்ளது.

  45 வயது முஸ்லிம் வியாபாரி ஜாகித் இவர் கூலித் தொழிலாளி மற்றும் வீதியில் பிஸ்கட் வியாபாரம் செய்பவருமாவார். கிராமம் கிராமமாக இரு சக்கர வாகனத்தில் சென்று பிஸ்கட் விற்பவர் ஆவார் இவர்.

  ம.பி.யின் தேவாஸ் மாவட்டத்தில் உள்ள அம்லாதாஸ் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜாகித். சம்பவம் நடந்த இன்றைய தினத்தில் போர்லி கிராமத்துக்கு வழக்கம் போல் பிஸ்கட் விற்கச் சென்றார். வியாபாரம் முடித்து திரும்பி வரும்போது இரண்டு பேர் வந்து இவரிடம் நீ யார், அடையாள அட்டையைக் காட்டு, ஆதாரை எடு என்று மிரட்டியுள்ளனர்.

  Also Read: அண்ணாப் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு

  இவர் ஆதார் அட்டையை எடுத்து வரவில்லை, இதனையடுத்து அந்த இருவரும் ஜாகித்தை அடித்து உதைத்துக் காயப்படுத்தியதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

  இதில் இவருக்கு கை கால்களில் லேசான காயம் ஏற்பட்டது, தன்னை தாக்கியவர்கள் பெயர் தெரியவில்லை, ஆனால் அடையாளம் தெரியும் என்கிறார் ஜாகித்.

  “இருவரும் போர்லி கிராமத்தினர்தான், இவர்கள் இருவரையும் பார்த்திருக்கிறேன். இருவரும் என்னை இனி கிராமத்துக்குள் நுழைந்தால் உதைபடுவாய் என்று எச்சரித்துத் தாக்கினர்” என்றார் ஜாகித்.

  போலீஸார் வழக்குப் பதிவு செய்து தாக்கிய இருவரையும் தேடி வருகின்றனர். கிராமத்தில் இவரிடம் பிஸ்கட் வாங்க வந்தவர்கள் இந்தச் சம்பவத்துக்கு சாட்சி என்கிறார் ஜாகித். உள்ளூர்வாசிகளிடத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  சில நாட்களுக்கு முன்பாக வளையல்கள் விற்கும் முஸ்லிம் வியாபாரியையும் கருணையற்று சிலர் தாக்கிய சம்பவம் நடந்தது, இப்போது முஸ்லிம்களுக்கு எதிராக இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
  Published by:Muthukumar
  First published: