ஹோம் /நியூஸ் /இந்தியா /

நவராத்திரி விழாவின் கர்பா நடன நிகழ்வில் கல்லெறிந்த இளைஞர்களை கம்பத்தில் கட்டிவைத்து அடித்த குஜராத் காவல்துறை

நவராத்திரி விழாவின் கர்பா நடன நிகழ்வில் கல்லெறிந்த இளைஞர்களை கம்பத்தில் கட்டிவைத்து அடித்த குஜராத் காவல்துறை

காட்சிப் படம்

காட்சிப் படம்

குற்றவாளிகளை மின்கம்பத்தில் வைத்து காவல்துறையினர் உடலை வதைக்கும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பேசு பொருளாகி உள்ளது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Gujarat, India

குஜராத் மாநிலம் கேதா மாவட்டத்தில் உள்ள உந்தலா கிரமாத்தில் நடைபெற்ற கர்பா பாரம்பரிய கலை நிகழ்ச்சியில் தகராறு ஏற்படுத்தியதாக 13 பேரை காவல்துறை கைது செய்துள்ளனர். மேலும் குற்றவாளிகளை மின்கம்பத்தில் வைத்து காவல்துறையினர் உடலை வதைக்கும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பேசு பொருளாகி உள்ளது.

குஜராத் மாநிலம் உந்தலா கிரமாத்தில்,  நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு  பாரம்பரிய கர்பா  கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், பள்ளிவாசல் இருக்கும் இடத்திற்கு அருகே நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், இதனை வேறு இடத்தில் மாற்றி நடத்த வேண்டும் என்று இஸ்லாமியர் கோரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில், இந்த கோரிக்கை தகராக மாறியதாகவும், இஸ்லாமியர் சிலர் கல்லெறிந்ததாகவும்  கூறப்படுகிறது.

உள்ளூர் கிராம மக்கள் அளித்த புகாரின் அடிப்படையில், 13 பேர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  இன்னும், நீண்ட விசாரனை நடைபெற வில்லை. குற்றவாளிகள் என்று நீதிமன்றம் அடையாளம் காணவில்லை. எந்தவித தண்டனையும் வழங்கப்படவில்லை. ஆனால், காவத்துறையினர் கைது செய்யப்பட்டவர்களை அங்குள்ள மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர். அங்குள்ள, வெகுசன மக்களும் காவல்துறையின் இந்த எல்லைமீறிய செயலில் பங்கு கொள்வது போல், உணர்ச்சிவசப்பட்டு, ஆவேசத்துடன் குரலெழுப்பு கின்றனர்.

தண்டனையின் வடிவம்?  சமூகத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தண்டனையானது எல்லாக் காலங்களிலும் எல்லாச் சமூகங்களிலும் இருந்து வருகிறது. மத்திய காலங்களில் (Medieval Period)  குற்றவாளிகளின் உடலை பொது வெளியில் வதைக்கும் முறை இருந்து வந்தது.  வெகுஜனக் கண்காட்சியாக இருந்து வந்த தண்டனை வடிவும், மக்களாட்சி முறையில் மாற்றம் கண்டது. தண்டனையின் வடிவம் பொதுவெளியில் இருந்து மறைக்கப்பட்டு நான்கு சிறை சுவருக்குள் கொண்டு வரப்பட்டது.

மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், குஜராத், டெல்லி என வட மாநிலங்களில், குற்றவாளிகள்/போராட்டக்காரர்கள்/கழகக்காரர்கள்  என அடையாளம் காணப்படுவோரின் வீடுகளை புல் டவுசர் மூலம் ஆட்சியாளர்கள் இடித்து வருகின்றனர்.

இதையும் வாசிக்க"ராஜராஜ சோழன் தமிழ் பேரரசன்.. இந்து அல்ல" - இயக்குநர் வெற்றிமாறன் கருத்திற்கு எம்.பி ஜோதிமணி ஆதரவு..

குற்றவாளியின் குற்றத்தை மிஞ்சி வழங்கப்படும் இந்தக் கொடூர தண்டனை முறையை உடனடியாக உச்சநீதிமன்றம் தலையிட்டு நிறுத்த வேண்டும் என்று  முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மற்றும் சமூக பொறுப்பாளர்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தனர். மேலும், முன்னாள் சட்டத்துறை அமைச்சர் கபில் சிபல், " பொதுவெளியில் தண்டனை கொடுப்பது, வீடுகளை இடிப்பது சட்டத்தின் படி அர்த்தமற்ற செயல் என்று எச்சரித்து இருந்தார்.

Published by:Salanraj R
First published:

Tags: Attack on muslims, Gujarat, Police