Home /News /national /

இஸ்லாமிய திருமண அழைப்பிதழில் விநாயகர், ராதா கிருஷ்ணா புகைப்படம்...!

இஸ்லாமிய திருமண அழைப்பிதழில் விநாயகர், ராதா கிருஷ்ணா புகைப்படம்...!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் இஸ்லாமிய திருமணத்திற்கான அழைப்பிதழ் ஒன்று நகரம் முழுமையும் பேசுபொருளாக மாறியுள்ளது.

உத்திரப் பிரதேசம் மாநிலத்தின் மீரட் மாவட்டத்தில் உள்ளது ஹஸ்தினாபூர் பகுதி. இங்கு வசித்து வருபவர் மொஹமட் சரபாத். இவர் தனது மகள் அஸ்மா கட்டூனின் திருமணத்திற்குக்காக திருமண அழைப்பிதழ் ஒன்றை அச்சிட்டுள்ளார். மார்ச் 4-ம் தேதி நடைபெறவுள்ள தனது மகள் திருமணத்திற்காக உறவினர்களுக்கு அழைப்பிதழை கொடுத்துள்ளார்.

Also see...மாஸ்டர் சொன்ன குட்டி ஸ்டோரிக்கு 5-ம் இடம்...! முதல் மூன்று இடங்கள் யாருக்குத் தெரியுமா?

அதில் விநாயகர் மற்றும் ராதா-கிருஷ்ணரின் புகைப்படத்தை அச்சிட்டிருந்தது. அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. இது குறித்து மொஹமட் சரபாத் தெரிவிக்கையில், இந்து-முஸ்லீம் நட்பை இவ்விதம் வெளிப்படுத்துவது நல்ல யோசனையாக இருக்கும் என நினைத்ததாக கூறியுள்ளார்.

மேலும், தனது நண்பர்களும் இதற்கு ஆதரவு தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், அவரது உறவினர்கள் மற்றும் முஸ்லீம் நண்பர்களுக்காக, அவர் மற்றொரு திருமண அழைப்பிதழை உருது மொழியில் அச்சிட்டுள்ளார்.

இதற்கு பதில் அளித்த அவர் "எனது உறவினர்கள் பலருக்கு இந்தி படிக்க முடியாது, அவர்களுக்காக நான் உருது மொழியிலும் அட்டைகளை அச்சிட்டுள்ளேன்" என்று கூறினார்.

Also see...கருவிழியில் ’டாட்டூ’ முயற்சி... பார்வையை இழந்த மாடல் அழகி..!
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Uttar pradesh

அடுத்த செய்தி