குஜராத்தில் கொரோனா பாதித்தவர்களுக்கு மியூசிக் தெரபி - நல்ல முன்னேற்றம் தருவதாக மருத்துவர்கள் நம்பிக்கை

கோப்புப்படம்

குஜராத் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இசை வழியாக சிகிச்சை வழங்கப்படுகிறது.

 • Share this:
  இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. பொதுமக்களைக் கடந்து, முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்களும், மக்கள் பிரதிநிதிகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். இந்தியாவில் இதுவரையில், 70 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் இதுவரையில் 1.5 லட்சம் பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள சாயாஜிராவ் கேக்வாட் மருத்துவமனையில், கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது மன அழுத்தத்தை போக்கும் வகையில், மியூசிக் தெரபி வழங்கப்படுகிறது.


  இதுமட்டுமின்றி LAUGHING THERAPY மற்றும் யோகா வகுப்புகள் நடத்தப்படுவது அவர்களது உடல் மற்றும் மனநிலையில் நல்ல முன்னேற்றத்தை வழங்கி வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
  Published by:Karthick S
  First published: