Home /News /national /

’இந்திய தாய்’ - திரௌபதி முர்முவை பாராட்டி அமுல் நிறுவனம் வெளியிட்ட வரைபடம் வைரல்!

’இந்திய தாய்’ - திரௌபதி முர்முவை பாராட்டி அமுல் நிறுவனம் வெளியிட்ட வரைபடம் வைரல்!

அமுல் நிறுவனம் வெளியிட்ட வாழ்த்து

அமுல் நிறுவனம் வெளியிட்ட வாழ்த்து

சுதந்திர இந்தியாவில் பிறந்து, நாட்டின் குடியரசுத்தலைவராக பொறுப்பேற்கும் முதல் நபர் என்ற பெருமை திரௌபதி முர்முவுக்கு கிடைத்துள்ளது.

    இந்திய குடியரசுத்தலைவராக ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு திங்கள்கிழமை (ஜூன் 25) பதவியேற்றுக் கொண்டார். பழங்குடியினத்தை சேர்ந்த முதல் குடியரசுத்தலைவர் என்ற பெருமையையும், இரண்டாவது பெண் குடியரசுத்தலைவர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.

    நாட்டின் 15வது குடியரசுத்தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்றுள்ளார். நாடாளுமன்றத்தில் உள்ள மத்திய அரங்கில் திங்கள்கிழமை காலை 10.15 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெற்றது. அவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

    அமுல் நிறுவனத்தின் பாராட்டு

    முன்னதாக, குடியரசுத்தலைவர் பதவிக்கான தேர்தலில் வெற்றி பெற்றிருந்த திரௌபதி முர்முவை பாராட்டும் விதமாக அமுல் நிறுவனம் வெளியிட்ட வரைபடம் வைரல் ஆனது. தமிழகத்தில் பால் மற்றும் பால் சார்ந்த விற்பனையை மேற்கொண்டு வரும் ஆவின் நிறுவனத்தைப் போலவே, குஜராத் மாநில அரசு சார்பில் நடத்தப்பட்டு வரும் நிறுவனம் அமுல் ஆகும்.

     



    அமுல் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் எப்போதுமே புதுமையான சிந்தனை மற்றும் குதூகலம் நிறைந்த பதிவுகளை வெளியிட்டு வருவது வழக்கம். அந்த வகையில் திரௌபதி முர்முவை பாராட்டி கடந்த சனிக்கிழமை டிவிட்டர் பக்கத்தில் வரைபடம் ஒன்றை அமுல் நிறுவனம் வெளியிட்டது.

    இந்திய தாய்

    குடியரசுத்தலைவர் மாளிகை முன்பாக, திரௌபதி முர்மு இரு கரங்களையும் சேர்த்து வணங்கி நிற்பதைப் போன்ற படத்தை அமுல் நிறுவனம் வெளியிட்டது. படத்தின் உள்ளே இந்திய தாய் என்ற வாசகம் குறிபிடப்பட்டிருந்தது. இந்த படத்திற்கான தலைப்பில், குடியரசுத்தலைவர் அவர்களை வரவேற்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    வைரல் ஆன படம்

    திரௌபதி முர்வுக்கு உள்நாட்டிலும், உலக அளவிலும் தலைவர்கள் பலர் வாழ்த்து கூறியபடி உள்ளனர். அதே நேரத்தில், சற்று புதுமையான சிந்தனையுடன் அமுல் நிறுவனம் வெளியிட்ட இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. எண்ணற்ற பார்வையாளர்கள் இந்தப் படத்தை லைக் செய்து, ஷேர் செய்து வருகின்றனர்.

    75ஆவது சுதந்திர தின ஆண்டில்…

    நாட்டின் குடியரசுத்தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்றதில் இன்னும் பல பெருமைகள் அவருக்கு கிடைத்துள்ளன. நாட்டின் 75ஆவது சுதந்திர தின ஆண்டு கொண்டாடப்படும் வேளையில் அவர் குடியரசுத்தலைவராக வந்துள்ளார். அதுமட்டுமின்றி, நாட்டில் இதுவரையில் குடியரசுத்தலைவராக இருந்த அனைவருமே 1947ஆம் ஆண்டு முந்தைய ஆண்டுகளில் பிறந்தவர்கள்.

    ALSO READ | மாணவியை விடுதிக்கு அழைத்து பாலியல் தொல்லை...பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் கைது

    சுதந்திர இந்தியாவில் பிறந்து, நாட்டின் குடியரசுத்தலைவராக பொறுப்பேற்கும் முதல் நபர் என்ற பெருமை திரௌபதி முர்முவுக்கு கிடைத்துள்ளது. முன்னதாக, குடியரசுத்தலைவர் பதவிக்கான தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக போட்டியிட்ட திரௌபதி முர்மு சுமார் 64.03 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து, எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக களமிறங்கிய யஷ்வந்த் சின்ஹா தோல்வி அடைந்தார்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Amul, President Droupadi Murmu

    அடுத்த செய்தி