கேரளாவில் காவல் ஆய்வாளரை வெட்டி கொலை செய்வதற்காக பின்தொடர்ந்து வந்த நபர், அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயலும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
கேரள மாநிலம் ஆலப்புழா, நூறநாடு பகுதியிலுள்ள காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணி செய்து வருபவர் அருண் குமார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அருண் குமாரின் காரை பின்தொடர்ந்து வந்த நபர் ஒருவர் பாயல் என்னும் பகுதியில் வைத்து தனது இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த வாளை எடுத்து காவல் ஆய்வாளர் அவரை வெட்டிக் கொலை செய்ய முயன்றுள்ளார்.
எனினும், சுதாரித்துக்கொண்ட அருண்குமார், அவரிடம் போராடி அவர் கையில் இருந்து வாளை லாவகமாக பிடுங்கினார். இதனால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அருண்குமார் அந்த நபரை கைது செய்தார். விசாரணையில் அவர் அதே பகுதியை சார்ந்த சுகதன் என்பது தெரியவந்துள்ளது.
காவல் ஆய்வாளரை வெட்டிக் கொலை செய்வதற்காக காரணம் என்ன என்பது இதுவரையும் தெரிய வரவில்லை. இந்த நிலையில் காவல் ஆய்வாளர் அருண்குமாரை வெட்டி கொலை செய்ய முயலும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Esakki Raja
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.