மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள குர்லா பகுதியில் 42 வயது பெண் வசித்து வருகிறார். இந்த பெண் வீட்டில் தனியாக இருந்த நிலையில், கடந்த 30ஆம் தேதி அதிகாலை அதே பகுதியைச் சேர்ந்த 3 பேர் திடீரென அவரது வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். இந்த பெண் தனியாக இருப்பதை அறிந்து கொண்டு நோட்டமிட்டே இவர்கள் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சலிட்டுள்ளார்.
ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மூன்று பேரும் பெண்ணை பலவந்தமாக கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். மேலும், அந்த பெண்ணிடம் இயற்கைக்கு மாறன வகையில் உறவு கொண்ட அந்த நபர்கள், தொடர்ந்து கொடூரமான சித்தரவதையும் செய்துள்ளனர். தங்கள் சிகரெட்டுகளை வைத்து பெண்ணின் பிறப்புறுப்பு உள்ளிட்ட பாகங்களில் சூடு வைத்துள்ளனர்.
மேலும், கூர்மையான கத்தி உள்ளிட்டவற்றை வைத்து பெண்ணின் மார்பு உள்ளிட்ட பகுதிகளில் கீறி தாக்கியுள்ளனர். இந்த கொடூரங்கள் அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்த குற்றவாளிகள், இதை வெளியே தெரிவித்தால் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பரப்பி விடுவோம் என மிரட்டியுள்ளனர். இதனால் பயந்து போன அந்த பெண் போலீசிடம் புகார் அளிக்காமல் தனக்கு நேர்ந்த அவலத்தை அக்கம்பக்கத்தினரிடம் கூறி முறையிட்டுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் தனியார் தொண்டு அமைப்பை தொடர்பு கொண்டு அவர்கள் உதவியுடன் போலீசிடம் புகார் அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: காதலன் ஹெல்ப்.. கணவனுக்கு ஸ்லோ பாய்சன்.. பக்கா ஸ்கெட்ச் போட்டும் போலீசில் சிக்கிய மனைவி!
அதன் அடிப்படையில் காவல்துறை கொலை முயற்சி, கூட்டு பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. மூவரும் தலைமறைவாக உள்ள நிலையில், அவர்களை தேடும் பணியில் காவல்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Gang rape, Mumbai, Rape