மகாராஷ்டிரா அரசியலில் புயலைக் கிளப்பிய உள்துறை அமைச்சர் மீதான மும்பை காவல் ஆணையர் புகார்

அனில் தேஷ்முக்

உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீதான புகார் குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    மகாராஷ்டிராவில் காவல்துறை ஆணையர் பரம்பீர் சிங், உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீது புகார் தெரிவித்து முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தை அடுத்து மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கின் வீட்டை பாஜகவினர் முற்றுகையிட்டனர்.

    ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியின் வீட்டின் அருகே வெடிபொருட்களுடன் கார் நிறுத்தப்பட்டிருந்த விவகாரத்தில் சச்சின் வாசே என்ற போலீஸ் அதிகாரியை தேசிய புலனாய்வு முகமை கைது செய்து விசாரிக்கிறது. இந்நிலையில் போதிய பாதுகாப்பு அளிக்கவில்லை என்று மும்பை காவல்துறை ஆணையர் பரம்பீர் சிங் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். பரம்பீர் சிங் முதலமைச்சர் உத்தவ் தாக்ரேவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் காவல்துறை அதிகாரி சச்சின் வாசேவை மாதந்தோறும் 100 கோடி லஞ்சம் வசூலிக்கக் வலியுறுத்தியதாக புகார் தெரிவித்துள்ளார். இந்த பணத்தை பார்கள், ஓட்டல்கள் மற்றும் பிற நிறுவனங்களிடம் இருந்து வசூலிக்க உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. அதனைக் கண்டிதது பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால், உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கின் உள்துறை அமைச்சர் பதவி பறிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அனில் தேஷ்முக் சார்ந்திருக்கும் கட்சித் தலைவர் சரத் பவார், ‘அனில் தேஷ்முக்குக்கு எதிரான இந்தக் குற்றச்சாட்டு தீவிரமானது. இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு இருக்கக் கூடிய சிறப்பு அதிகாரம். இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை முழுவதும் முழு மரியாதை கொண்டிருக்கும் அதிகாரியைக் கொண்டு விசாரணை நடத்தவேண்டும். ஜூலியோ ரிபெய்ரோ இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்தலாம்’ என்று தெரிவித்தார்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: