MUMBAI TEEN BEFRIENDS GIRL ON INSTAGRAM BREAKS INTO HER HOME AND STEALS GOLD WORTH RS 14 LAKH VIN GHTA
மும்பையில் 'இன்ஸ்டாகிராம் தோழி' வீட்டில் ரூ.14 லட்சம் கைவரிசை - தோழனை கைது செய்த காவல்துறை!
மாதிரி படம்
விசாரணை மூலம் கொள்ளையனை காவல்துறையினர் அடையாளம் கண்டு கைது செய்தனர். அவரிடம் இருந்து ஐபோன் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணத்தையும் காவல்துறையினர் மீட்டனர்.
மும்பையில் 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை திருடி சென்ற, இன்ஸ்டாகிராம் தோழியின் நண்பனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மும்பையின் கோலாபா (Colaba ) பகுதியில் வசித்து வந்த சார்ட்டர்டு அக்கவுண்டன்ட் ஒருவரின் வீட்டில் 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை, பணம் திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கொள்ளையனை வலைவீசி தேடினர். அப்பகுதியில் இருந்த சிசிடிவிக்களை ஆய்வு செய்தபோது இளைஞர் ஒருவர், திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. வீடியோவில் இருந்த இளைஞர் குறித்து விசாரணை நடத்தியபோது, சார்ட்டர்டு அக்கவுண்டன்டின் (chartered accountant) மகளுடன் பழகிய இளைஞர் சாய்ஷான் அகவான் (Shaizaan Agwan) என்பதை கண்டுபிடித்து அவரை கைது செய்தனர்.
19 வயது இளைஞரான சாயிஷான் அகவான் மும்பையின் மாசாகான் (Mazagaon) பகுதியில் வசித்து வந்துள்ளார். இன்ஸ்டாகிராம் (INSTAGRAM) மூலம் கோலாபா பகுதியில் வசித்து வந்த சார்டர்டு அக்கவுண்டன்டின் மகளுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் நெருங்கி பழகியுள்ளனர். விடுமுறை நாட்களில் வெளியில் சுற்றித் திரிந்தபோது, தங்கள் வீட்டின் டூபிளிக்கேட் சாவி ஒன்றை சாயிஷான் அகவானிடம் சார்டர்டு அக்கவுண்டன்டின் மகளான இன்ஸ்டாகிராம் தோழி கொடுத்துள்ளார். பின்னர், இன்ஸ்டாகிராம் தோழி குடும்பத்தினர் கடந்த மாத இறுதியில் இன்பச் சுற்றுலா சென்றுள்ளனர்.
இந்த நேரத்தை சரியாக பயன்படுத்திக்கொண்ட சாயிஷான், தோழியின் வீட்டில் நுழைந்து 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை மற்றும் பணம், ஐபோன் ஆகியவற்றை எடுத்துச் சென்றுள்ளார். இன்பச் சுற்றுலாவை முடித்து வீடு திரும்பிய இன்ஸ்டாகிராம் தோழியின் குடும்பத்தினர், வீட்டில் கொள்ளைபோய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, அருகில் இருந்த காவல்நிலையத்தில் சார்டர்டு அக்கவுண்டன்ட் (chartered accountant) கொள்ளை குறித்து புகார் அளித்துள்ளார்.
இதனடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணை மூலம் கொள்ளையனை காவல்துறையினர் அடையாளம் கண்டு கைது செய்தனர். அவரிடம் இருந்து ஐபோன் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணத்தையும் காவல்துறையினர் மீட்டனர். தானே பகுதியில் பாலிவுட் ஸ்டைலில் நகைக்கடையில் நடைபெற்ற கொள்ளைக்கு அடுத்த நாள் சாயிஷாகான் திருட்டில் ஈடுபட்டுள்ளார்.
தானே பகுதியில் ஜூவல்லரி கடைக்கும் அருகில் இருக்கும் கடையை வாங்கிய கொள்ளையர்கள், இரு கடைக்கும் பொதுவாக இருக்கும் சுவற்றை துளையிட்டு நகைக்கொள்ளையை அரங்கேற்றியுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட 2 பேரை கைது செய்துள்ளனர். இதேபோல், நாகபாடா பகுதியில் மூதாட்டி ஒருவரை தாக்கி 71 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த கொள்ளையர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.