`மத்திய பட்ஜெட் தாக்கல் எதிரொலி; மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் உயர்வு

`மத்திய பட்ஜெட் தாக்கல் எதிரொலி; மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் உயர்வு

சென்செக்ஸ்

வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்த மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் எண் குறியீட்டில் இருந்து 5 விழுக்காடு உயர்ந்து காணப்பட்டது. வர்த்தகநேர முடிவில் சென்செக்ஸ் 2 ,314. 84 புள்ளிகள் உயர்ந்து 48,600 புள்ளிகளில் நிறைவடைந்தது.

 • Share this:
  மத்திய பட்ஜெட் தாக்கல் எதிரொலியாக மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீட்டு எண் 2 ,315 புள்ளிகள் உயர்ந்து 48,600 ஆக வர்த்தகமானதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் காப்பீட்டு துறையில் அந்நிய நேரடி முதலீடுகளை அதிகரிப்பது, பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது என பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதன்காரணமாக கடந்த வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்த மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் எண் குறியீட்டில் இருந்து 5 விழுக்காடு உயர்ந்து காணப்பட்டது. வர்த்தகநேர முடிவில் சென்செக்ஸ் 2 ,314. 84 புள்ளிகள் உயர்ந்து 48,600 புள்ளிகளில் நிறைவடைந்தது.

  இதேபோன்று நிப்டி 646 புள்ளிகள் உயர்ந்து 14, 281 புள்ளி ஆக காணப்பட்டது. சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள இன்டஸ்இன்ட், ஐசிஐசிஐ, எச்.டி.எப்.சி ஆக்சிஸ், கோடாக் வங்கிகளின் பங்கு விலை உயர்ந்து காணப்பட்டது. இன்டஸ்இன்ட் வங்கியின் பங்கு விலை உச்சமடைந்து அதிக அளவாக 15.16 சதவீத உயர்ச்சியை கண்டது. இதேபோன்று ரிலையன்ஸ், மாருதி, டிசிஎஸ், ஐடிசி போன்ற நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தது. பட்ஜெட்டில் பெரியளவில் வரிச்சலுகைகள் இல்லாததே பங்கு சந்தை உயர்வுக்கு காரணம் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

  மத்திய பட்ஜெட்டில் தங்கம் இறக்குமதி மீதான வரி குறைக்கப்பட்டபோதிலும், தங்கம் விலை குறைய வாய்பில்லை என்றும் பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் தெரிவித்திருக்கிறார்.

  பட்ஜெட்டில் பல்வேறு விதமான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளதால், முதலீட்டாளர்கள் நம்பிக்கையுடன் முதலீடுகளை தொடர்ந்து வருகின்றனர். இது இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்குமா என்று பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
  Published by:Ram Sankar
  First published: