முகப்பு /செய்தி /இந்தியா / திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை விஷ ஊசி செலுத்தி கொலை செய்த வார்டு பாய்!

திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை விஷ ஊசி செலுத்தி கொலை செய்த வார்டு பாய்!

காதலியை கொலை செய்த காதலன்

காதலியை கொலை செய்த காதலன்

வார்டு பாயாக பணிபுரிந்து வரும் சந்திரகாந்த், கொலை செய்யப்பட்ட பெண்ணை 6 மாதமாக காதலித்து வந்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

நோய்வாய்ப்பட்டிருந்த காதலி, திருமணம் செய்ய வற்புத்தியதால் அவருக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி விஷ ஊசி செலுத்தி இளைஞர் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நவி மும்பையின் பன்வேல் காவல் நிலைய எல்லையில் புதிய விமான நிலையம் அமையவிருக்கும் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் கடந்த மே 29ம் தேதி கண்டறியப்பட்டது. அங்கு வந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துவிட்டு விசாரணையை தொடங்கினர்.

பெண்ணின் உடலில் எந்தவித காயங்களோ இருக்கவில்லை அதே போல சடலத்தின் அருகே எந்தவித அடையாளச் சான்றுகளோ, பிற தகவல்களோ கிடைக்காததால் இறந்தவர் யார் என்பதை அடையாளம் கண்டறிவதில் சிக்கல் இருந்தது. இருப்பினும் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் தான் கண்டெடுத்த பொருட்கள் அடங்கிய பையை காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். அதில் ஆதார் கார்டு, பர்ஸ் மற்றும் சில துணிகள் இருந்தன. இதன் பின்னர் ரமேஷ் தோம்ப்ரே என்ற இளைஞர் காவல்நிலையத்திற்கு வந்து அந்த பை தன்னுடைய சகோதரிக்கு சொந்தமானது என கூறி மருத்துவமனையில் இருந்த சடலத்தை தன்னுடைய சகோதரி என உறுதி செய்தார்.

இதன் பின்னர் தான் இந்த கொலை சம்பவத்தின் முடிச்சுகள் அவிழத் தொடங்கியது.

ரமேஷ் தோம்ப்ரே, பன்வேலில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்து வரும் சந்திரகாந்த் கைகார் என்ற நபருடன் தன்னுடைய சகோதரிக்கு காதல் இருந்ததாகவும், அவர்களுக்குள் சண்டை நிகழ்ந்ததும் தனக்கு தெரியும் என கூறினார்.

இதனையடுத்து சந்திரகாந்த்தை பிடித்த காவல்துறையினர் விசாரித்த போது தான் தான் அந்த பெண்ணை கொலை செய்த்ததாக தெரிவித்தார்.

வார்டு பாயாக பணிபுரிந்து வரும் சந்திரகாந்த், கொலை செய்யப்பட்ட பெண்ணை 6 மாதமாக காதலித்து வந்ததாகவும், அதன் பின்னர் அவருக்கு கொடிய நோய் இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டதாகவும் கூறினார். தனக்கு கொடிய நோய் இருப்பதால் உடனடியாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அப்பெண் மிரட்டத் தொடங்கியதால் வேறு வழியில்லாமல் அவரை கொலை செய்ய முடிவெடுத்தேன்.

Read More:   இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா வேரியண்டுக்கு புதிய பெயர் சூட்டியது உலக சுகாதார அமைப்பு!

இந்த நிலையில் அப்பெண்ணின் நோய்க்கு சிகிச்சை அளிப்பதாக கூறி 4 கெட்டமைன் ஊசியை அவருக்கு செலுத்தினேன். இதன் காரணமாக அவர் உயிர் பிரிந்தது. அவருடைய பையை தூக்கி எறிந்தேன் என விசாரணையில் கூறியிருக்கிறார் சந்திரகாந்த்.

சந்திரகாந்த் மீது கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். காதலித்த பெண்ணையே விஷ ஊசி செலுத்திய இளைஞர் குறித்த தகவல் மும்பையை பரபரப்பாக்கி இருக்கிறது.

First published:

Tags: Crime | குற்றச் செய்திகள், Girl Murder, Love, Mumbai