முகப்பு /செய்தி /இந்தியா / கொரோனாவால் திணறும் மகாராஷ்டிரா... ஒருநாள் பாதிப்பில் உச்சத்தை தொட்டது மும்பை

கொரோனாவால் திணறும் மகாராஷ்டிரா... ஒருநாள் பாதிப்பில் உச்சத்தை தொட்டது மும்பை

கொரோனா தொற்று

கொரோனா தொற்று

கடந்த24 மணி நேரத்தில் மட்டும் 144 ஒமைக்ரான் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. மாநில அளவில் இதுவரையில் 797 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • Last Updated :

கொரோனா பரவல் தாறுமாறாக உயர்ந்து வருவதால் அதனை சமாளிக்க முடியாமல் மகாராஷ்டிர அரசு திணறி வருகிறது. மும்பையில் கொரோனா பரவல், ஒருநாள் பாதிப்பில் உச்சத்தை தொட்டுள்ளது.

இன்றுவெளியிடப்பட்ட கொரோனா குறித்த அரசின் அறிவிப்பில் மகாராஷ்டிராவில் இன்று மட்டும் 26,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மொத்த பாதிப்பு 67 லட்சத்து 57 ஆயிரத்து 32 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனாவால் மட்டும் தற்போது வரையில் 1,41,581 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேபோன்று கடந்த24 மணி நேரத்தில் மட்டும் 144 ஒமைக்ரான் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. மாநில அளவில் இதுவரையில் 797 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் 15,166 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ஒருநாள் பாதிப்பில் உச்சம் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா பரவல் குறித்து எச்சரிக்கை செய்திருந்த மும்பை மேயர், ஒருநாள் பாதிப்பு இருபது ஆயிரத்தை எட்டிவிட்டால் மும்பை முழுவதும் பொது முடக்கம் ஏற்படுத்தப்படும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் பாதிப்பு ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்துள்ளது. இவர்களில் 87 சதவீதம்பேருக்கு அறிகுறியே தென்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கொரோனா வைரஸின் புதிய திரிபான ஒமைக்ரான் வைரஸ் பரவல் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தமிழ்நாட்டிலும் ஒமைக்ரான் வைரஸ் பரவல் கட்டுக்குள் இல்லாமல் அதிகரித்துவருகிறது. அதனையடுத்து, தமிழ்நாடு அரசு கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளை தொடர்ந்து அமல்படுத்திவருகிறது. அதன்படி, வரும் 9-1-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகத்தில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

அந்த நாளில் அத்தியாவசியப் பணிகளான மருத்துவப் பணிகள், மருந்தகங்கள், பால் விநியோகம், ATM மையங்கள், சரக்கு வாகனப் போக்குவரத்து மற்றும் பெட்ரோல் டீசல் பங்குகள் போன்றவை இயங்குவதற்கு அனுமதிக்கப்படும்.

9-1-2022 அன்று முழு ஊரடங்கின் போது, உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் காலை 7.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை அனுமதிக்கப்படும்.

Also read: Omicron | உலகை அச்சுறுத்தும் ஒமிக்ரான்... நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் 

உணவு டெலிவரி செய்யும் மின் வணிக நிறுவனங்கள் மேற்சொன்ன நேரத்தில் மட்டும் செய்லபட அனுமதிக்கப்படும். இதர மின் வணிக நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை.

9-1-2022 மற்றும் வார நாட்களில் இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி வரை விமானம், இரயில் மற்றும் பேருந்துகளில் பயணிப்பதற்காக விமானம், இரயில் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு செல்ல சொந்த மற்றும் வாடகை வாகனங்களை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படும். அவ்வாறு பயணிக்கும் போது, பயணச்சீட்டு வைத்து கொள்ள வேண்டும்.

மாநிலம் முழுவதும் 6.1.2022 முதல் வார நாட்களில் இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி வரையிலும் ஊரடங்கு அமல்படுத்தப்படும். இந்த நேரத்தில் அனைத்து வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் போன்றவை செயல்பட அனுமதி இல்லை.

இந்தியாவில் கொரோனா பரவல் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியா முழுவதும் பொது முடக்கம் ஏற்படுத்தப்படாத நிலையில், பல்வேறு மாநிலங்கள் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

top videos

    First published:

    Tags: Covid-19