மகாராஷ்டிராவில் கனமழையால் முடங்கிய இயல்பு வாழ்க்கை - 6 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்

news18
Updated: August 4, 2019, 7:14 AM IST
மகாராஷ்டிராவில் கனமழையால் முடங்கிய இயல்பு வாழ்க்கை - 6 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்
சாலைகளில் தேங்கியுள்ள மழை நீர்
news18
Updated: August 4, 2019, 7:14 AM IST
மகாராஷ்டிராவில் கனமழையால் மீண்டும் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ள நிலையில், தானே, ராய்கட், நாசிக், புனே உட்பட 6 மாவட்டங்களில் இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மும்பையில் மழை பாதிப்பில் நேற்று ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்தனர்.

மும்பையில் இரண்டு நாட்களாக பெய்து வரும் மழையால் நகர் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அந்தேரி, மலாட், தஹிசார் உள்ளிட்ட இடங்களில் மழை வெள்ளத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மும்பை சென்டரலில் இருந்து துறைமுகம் செல்லும் வழித்தடத்தில் தண்ணீர் தேங்கியதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மும்பை விமான நிலையத்திற்கு வந்து செல்ல வேண்டிய விமானங்கள் 15 முதல் 30 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்படுகின்றன.




நவி மும்பையில் உள்ள பாண்டவ்கடா நீர் வீழ்ச்சியில் குளிக்கச் சென்ற 4 கல்லூரி மாணவிகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதில் உயிரிழந்தனர். மும்பை கடற்கரைப்பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டதால், அப்பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

தானேவில் கனமழையால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியது. ரயில் நிலையத்தில், தண்டவாளங்களில் மழைநீர் சூழ்ந்ததால் ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.

ராய்கட் மாவட்டத்தில் சோன்யாச்சி வாடி கிராமத்தில் மழை வெள்ளத்தில் சிக்கித் தவித்த 63 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டனர். தாகுர்வாடி-மங்கி ஹில்ஸ் இடையேயான ரயில் வழித்தடத்தில் பாறாங்கற்கள் விழுந்தன. இதனால், சென்னை விரைவு ரயில், கன்னியாகுமரி விரைவு ரயில் டெக்கான் கியூன் மற்றும் கொனார்க் விரைவு ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் என மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.

Loading...



புனே மாவட்டத்தில் உள்ள முல்ஷி அணையில் இருந்து வினாடிக்கு 40 ஆயிரம் கன அடி நீரும், பவானா அணையில் இருந்து 10 ஆயிரம் கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, பால்கர், தானே, ராய்கட், நாசிக், புனே மற்றும் சடாரா ஆகிய 6 மாவட்டங்களில் இன்றும் பலத்த மழை பெய்யக் கூடும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவில் கனமழை கொட்டி வருவதால் கோதாவரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

First published: August 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...