மும்பையில் வெள்ளத்தில் சிக்கித்தவித்த தந்தை மற்று மகளை போலீஸ்காரர் ஒருவர் பாதுகாப்பாக அழைத்துச்செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அங்கு மழை வெளுத்து வாங்குகிறது. தலைநகரான மும்பையில் மழை கொட்டித் தீர்த்தது. மும்பை நகரே வெள்ளத்தில் தத்தளிக்கிறது. மும்பையில் வெள்ளத்தில் சிக்கித்தவித்த தந்தை மற்று மகளை போலீஸ்காரர் ஒருவர் பாதுகாப்பாக அழைத்துச்செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மும்பை போலீஸாருக்கு சல்யூட் என ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவானது கடந்த சில தினங்களுக்கு முன்பு காண்டிவலி பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதன்காரணமாக வீட்டை வெள்ளம் சூழ்ந்த காரணத்தால் காயம் அடைந்த ஒரு தந்தை மற்றும் மகள் வெளியேற முடியாமல் தவித்து வந்துள்ளனர். அப்போது அந்தப்பகுதியில் பணியில் இருந்த ராஜேந்திர சேகர் என்ற போலீஸார் அவர்களுக்கு உதவி செய்துள்ளார்.
முழங்கால் அளவு ஓடிய நீரில் அந்த சிறுமியை தோளில் சுமந்துக்கொண்டு அவரது தந்தையையும் பத்திரமாக மீட்டு அருகில் உள்ள பாதுகாப்பாக இடத்துக்கு அழைத்து சென்றனர். கொட்டும் மழையில் முழங்கால் அளவு பாயும் வெள்ளத்தில் போலீஸ்காரர் ஒருவர் துணிச்சலுடன் இருவரை காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் அந்த காவலரின் செயலை பாராட்டியுள்ளனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.