புனேயில் கனமழையால் இடிந்துவிழுந்த சுவர் - 4 குழந்தைகள் உள்பட 15 பேர் உயிரிழப்பு

news18
Updated: June 29, 2019, 10:04 AM IST
புனேயில் கனமழையால் இடிந்துவிழுந்த சுவர் - 4 குழந்தைகள் உள்பட 15 பேர் உயிரிழப்பு
விபத்து நடந்த இடம்
news18
Updated: June 29, 2019, 10:04 AM IST
மஹாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் கனமழை காரணமாக அடுக்குமாடி குடியிருப்பின் சுற்றுசுவர் இடிந்து விழுந்ததில், 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தென்மேற்கு பருவமழை காரணமாக மஹாராஷ்டிரா உள்ளிட்ட மேற்கு கடலோரப்பகுதிகளில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

குறிப்பாக மும்பை, புனே உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதலே பரவலாக மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை நேற்று காலை தீவிரமடைந்தது. மும்பையில் நகரம் முழுவதும் விடாமல் கனமழை வெளுத்து வாங்கியது.

கனமழை காரணமாக புனே அருகே உள்ள கொந்த்வா என்ற இடத்தில்  குடியிருப்பு கட்டிடத்தின் 60 அடி நீள சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 குழந்தைகள் உள்பட 15 பேர் சிக்கி உயிரிழந்தனர்.

இதனை அடுத்து, விரைந்து வந்த மீட்புக்குழுவினர் இடிபாடுகளில் சிக்கியிருந்த மற்றவர்களை மீட்டனர். விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மாநில முதல்வர் பட்நாவிஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.மும்பை, தானே பகுதிகளில் சில நாட்களுக்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

First published: June 29, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...