Home /News /national /

சூட்கேசில் மாடல் அழகி உடல்: செக்ஸுக்கு மறுத்ததால் கொலை செய்ததாக குற்றவாளி வாக்குமூலம்!

சூட்கேசில் மாடல் அழகி உடல்: செக்ஸுக்கு மறுத்ததால் கொலை செய்ததாக குற்றவாளி வாக்குமூலம்!

மாடல் அழகி மான்சி தீக்ஷித்

மாடல் அழகி மான்சி தீக்ஷித்

மும்பையில் பெண் மாடல் மான்ஸி தீக்ஸித் சூட்கேசில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட வழக்கில் கைதான கொலையாளி சயீத் பரபரப்பான வாக்குமூலம் அளித்துள்ளான்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
    மும்பையில் பெண் மாடல் மான்ஸி தீக்ஷித் சூட்கேசில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட வழக்கில், கைதான சையத்திடம் விசாரணை நடத்திய போது, செக்ஸுக்கு மறுத்ததால் ஆத்திரத்தில் மான்ஸியை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

    ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மான்ஸி தீக்ஷித் மும்பையில் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். 20 வயதே ஆன இவர் ஈவென்ட் மேனேஜ்மெண்ட் வேலைகளிலும் ஈடுபட்டு வந்தார்.
    இந்நிலையில், மலாட் வெஸ்ட் பகுதியில் சாலையோரம் சூட்கேசில் மான்ஸி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதனை அடுத்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சையத் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    கொலையான மாடல் அழகி மான்ஸி தீக்ஸித்


    “ஞாயிறு அன்று இரவு மான்ஸி, சையத்தின் வீட்டுக்கு வந்துள்ளார், அப்போது செக்ஸுக்கு இணங்கும் படி மான்ஸியிடம் சயீத் கூறியுள்ளார். அதற்கு மான்ஸி மறுக்கவே அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், கோபமடைந்த சையத் நாற்காலியை கொண்டு மான்ஸியின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில், பலத்த காயமடைந்த மான்ஸி சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார்” என போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    சடலத்தை அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்காக அவர் மேற்கொண்ட திட்டங்களும் வெளியாகியுள்ளது. பெரிய சூட்கேசில் மான்ஸியின் சடலத்தை திணித்து பின்னர் மும்பை ஏர்போர்ட் செல்ல டாக்ஸி புக் செய்து அதில் பயணித்துள்ளார். ஆள் நடமாட்டம் இல்லாத மலாட் வெஸ்ட் பகுதியில் காரை நிறுத்தச்சொல்லி டாக்ஸிக்கு பணம் கொடுத்து போகச்சொல்லிவிட்டு கையிலிருந்த சூட்கேசை புதரில் வீசி விட்டு அங்கிருந்து ரிக்‌ஷா ஏறிச்சென்றுள்ளார்.

    கொலையான மாடல் அழகி மான்ஸி தீக்ஸித்


    ஏர் போர்ட்டுக்கு காரை புக் செய்துவிட்டு நடுவழியில் இறங்கவும் டாக்ஸி ஓட்டுநருக்கு சந்தேகம் வந்துள்ளது. தூரத்தில் காரை நிறுத்தி விட்டு சூட்கேஸை வீசியதை பார்த்த ஓட்டுநர் காவல்துறையிடம் புகார் செய்துள்ளார்.

    விசாரணையில் ஈடுபட்ட காவல்துறையினர் ஆன்லைனில் டாக்ஸி புக் செய்த போது அவர் கொடுத்த விவரங்களை வைத்து சயீத்தை கைது செய்துள்ளனர். மேலும், அங்கிருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் சயீத்தான் சூட்கேசை கொண்டு சென்றுள்ளார் என்பதையும் போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். தொடர்ந்து சயீத்திடம் விசாரணை நடந்துவருகிறது என போலீசார் தெரிவித்துள்ளனர்.
    Published by:Sankar
    First published:

    Tags: Confession, Mansi Dixit, Mumbai model, Murder

    அடுத்த செய்தி