மும்பையில் கொரோனா பாதிப்பு மே மாத இறுதியிலேயே உச்சத்தை தொட்டுவிட்டதாக மாநில கொரோனா தடுப்பு பணிகள் குழு உறுப்பினர் சசங் ஜோஷி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸால் இந்தியாவிலேயே மோசமான பாதிப்பை சந்தித்த நகராக மும்பை உள்ளது. அந்தேரி கிழக்கு, அந்தேரி மேற்கு, தாராவி உட்பட மாநகர் முழுவதும் தொற்று பரவலின் ஹாட்ஸ்பாட்டாக உருவெடுத்ததால், மும்பையில் மட்டும் நாளொன்றுக்கு 1,200 முதல் 1700 நபர்களுக்கு மேல் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வந்தது.
இதன்மூலம் மகாராஷ்டிராவில் ஒரு நாளில் கண்டறியப்படும் மொத்த பாதிப்பில் 75 விழுக்காடு வரை மும்பையில் பதிவாகும் நிலை உருவானது. இந்நிலையில், மும்பையில் கடந்த சில தினங்களாக தொற்று பாதிப்பு எண்ணிக்கை ஆயிரமாகக் குறைந்துள்ளது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மாநில கொரோனா தடுப்பு பணிகள் குழு உறுப்பினர் சசங் ஜோஷி, மும்பையில் கொரோனா பாதிப்பு மே 15-இல் இருந்து 31-ஆம் தேதிக்குள் உச்சத்தை தொட்டுவிட்டதாகக் கூறினார்.
தொற்று பரவல் உச்சத்தில் இருந்த போது நாளொன்றுக்கு அதிகபட்சமாக 1700 பேர் வரை பாதிக்கப்பட்டதாகவும் அதன்பின் தொற்று எண்ணிக்கை ஆயிரம் முதல் 1200-ஆகக் குறைந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.
அதனை உறுதிப்படுத்தும் வகையில் மும்பையில் புதன்கிழமை 1118 பேருக்கு மட்டும் தொற்று கண்டறியப்பட்டது. மாநகரின் முக்கிய ஹாட்ஸ்பாட்டாக கருதப்பட்ட தாராவியில் புதன்கிழமை 10 பேருக்கு மட்டும் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.
அதேநேரம், ஜூலை ஒன்றாம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தினால் அடுத்த 15 நாட்களில் இரண்டாவது அலை பரவிவிடும் அபாயம் உள்ளதாக சசங் ஜோசி எச்சரித்தார்.
தொற்று பரவல் இரட்டிப்பாகும் விகிதம் 40 முதல் 45 நாட்கள் வரை உள்ள இடங்களில் கூடுதல் தளர்வுகளை அளிக்கவும், கொரோனா தொற்று இரட்டிப்பாகும் விகிதம் 30 நாட்களுக்கு குறைவாக உள்ள பகுதிகளில் குறைந்தளவு தளர்வுகள் மட்டும் அளிக்க பரிசீலித்து வருவதாகக் கூறினார்.
ஊரடங்கு கட்டுப்பாடுகளை படிப்படியாக குறைக்கும்பட்சத்தில் கொரோனா பரவலை எளிதாக கையாள முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
Also read... அண்ணா நகர், கோடம்பாக்கம் மண்டலங்களில் 5000-ஐக் கடந்தது தொற்று எண்ணிக்கை... சென்னை அப்டேட்!
இதற்கிடையே மும்பையின் வடக்கு புறகர் பகுதிகளான போரிவாலி, கண்டிவாலி, தஹிசார், மலாட், அந்தேரி கிழக்கு, அந்தேரி மேற்கு ஆகிய பகுதிகளில் தொற்று பரவலை கட்டுப்படுத்த தாராவியை போன்று ஒவ்வொரு வீடாக சென்று கொரோனா சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது,
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.