ஒரு தலைக் காதலால் நேர்ந்த விபரீதம்: காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணை ரயில் முன் தள்ளிவிட்ட இளைஞர்!

ஒரு தலைக் காதலால் நேர்ந்த விபரீதம்: காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணை ரயில் முன் தள்ளிவிட்ட இளைஞர்!

மாதிரி படம்

மும்பையின் வதாலா பகுதியைச் சேர்ந்தவர் சுமேஷ் ஜாதவ் , நேற்று மாலை இவர் 21 வயது மதிக்கத்தக்க பெண்ணை விரட்டிச் சென்ற போது அப்பெண் அந்தேரியில் இருந்து கர் பகுதிக்கு புறநகர் ரயிலில் ஏறி தப்பினார். இதன் பின்னர் தனது தாயை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அப்பெண் தனது தாயை கர் ரயில் நிலையத்திற்கு உதவிக்காக வருமாறு அழைத்துள்ளார்.

  • Share this:
தனது காதலை ஏற்க மறுத்த மும்பையைச் சேர்ந்த 21 வயது பெண்ணை ஓடும் ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு தலைக் காதலால் சில நேரங்கள் விபரீத சம்பவங்கள் அரங்கேறி விடுகின்றன. விரும்பியவர் கிடைக்காத விரக்தியில் கட்டுக்கடங்காக உணர்ச்சியின் வெளிப்பாடாக விரும்பியவரையே கொலை செய்ய துணிவதும் ஒரு தலைக் காதலின் உச்சபட்ச கொடுமையாகும். அந்த வகையில் மும்பையில் ஒரு தலைக் காதலால் காதலித்த பெண் தனது காதலை ஏற்காததால் ஓடும் ரயில் முன் தள்ளிவிட்டு அவரை கொலை செய்ய துணிந்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையின் கர் புறநகர் ரயில் நிலையத்தில் நேற்று (வெள்ளிக் கிழமை) மாலை நடந்த இச்சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ளது.
மும்பையின் வதாலா பகுதியைச் சேர்ந்தவர் சுமேஷ் ஜாதவ்
, நேற்று மாலை இவர் 21 வயது மதிக்கத்தக்க பெண்ணை விரட்டிச் சென்ற போது அப்பெண் அந்தேரியில் இருந்து கர் பகுதிக்கு புறநகர் ரயிலில் ஏறி தப்பினார். இதன் பின்னர் தனது தாயை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அப்பெண் தனது தாயை கர் ரயில் நிலையத்திற்கு உதவிக்காக வருமாறு அழைத்துள்ளார்.

பின்னர் அப்பெண் கர் ரயில் நிலையத்தில் இறங்கிய போது அங்கு காத்திருந்த தாயுடன் இணைந்து வேகவேகமாக நடந்தார். இவர்கள் இருவரையும் வழிமறித்த சுமேஷ் ஜாதவ், நான் உன்னை காதலிக்கிறேன் நீ என்னுடன் வந்துவிடு இருவரும் திருமணம் செய்து கொள்வோம் என அந்த இளம் பெண்ணிடம் தெரிவித்துள்ளார்.

தனக்கு இதில் ஈடுபாடு இல்லை எனவும் உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என அப்பெண் தெரிவித்த போது, தான் தற்கொலை செய்து கொள்வதாக கூறி அங்கு வந்து கொண்டிருந்த ரயில் முன் பாய்வதற்காக ஓடினார். திடீரென நின்று திரும்பி வந்த சுமேஷ் ஜாதவ், அந்த பெண்ணிடம் மீண்டும் சென்று அவரை தர தரவென இழுத்து வந்து பிளாட்ஃபார்மில் வந்து கொண்டிருந்த ரயிலின் இடைவெளியில் இருந்த பிளார்ஃபார்முக்குள் அப்பெண்ணை தள்ளி விட்டார். அருகில் இருந்த தாயார் தடுத்த போதிலும் அப்பெண்ணை காப்பாற்றும் முயற்சிக்கு பலனில்லை.

ரயில் சென்று கொண்டிருந்த போது பிளாட்ஃபர்மிர்குள் அப்பெண் விழாமல் இருந்ததால் உயிர் தப்பினார். அதே நேரத்தில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதே நேரத்தில் இளைஞர் சுமேஷ் ஜாதவ் அங்கிருந்து தப்பியோடினார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அப்பெண்ணுக்கு தலையில் 12 தையல்கள் போடப்பட்டன. பின்னர் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதனிடையே 12 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின்னர் இளைஞர் சுமேஷ் ஜாதவை காவல்துறையினர் கைது செய்தனர்.

அண்மையில் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய உத்தரப்பிரதேசத்தின் உன்னாவ் பகுதியில் கடந்த வாரம் சிறுமிகள் இருவர் விஷம் வைத்து கொல்லப்பட்டதும், மேலும் ஒரு சிறுமி உயிருக்கு போராடி வருவதும் ஒரு தலைக்காதலால் நடைபெற்ற விபரீதம் என காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: