ஹோம் /நியூஸ் /இந்தியா /

சொகுசு காரை விற்று ஏழைகளுக்கு இலவசமாக ஆக்ஸிஜன் சிலிண்டர் விநியோகிக்கும் இளைஞர்

சொகுசு காரை விற்று ஏழைகளுக்கு இலவசமாக ஆக்ஸிஜன் சிலிண்டர் விநியோகிக்கும் இளைஞர்

ஷானவாஸ் ஷேக்

ஷானவாஸ் ஷேக்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  கொரோனா பெருந்தொற்று காலத்தில் மும்பையைச் சேர்ந்த ஷானவாஸ் ஷேக் என்பவர் தனது சொந்த செலவில் ஏழைகளுக்கு ஆக்ஸிஜன்  சிலிண்டர் சப்ளை செய்து வருகிறார். மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் 22 லட்சம் மதிப்புள்ள தனது சொகுசு காரை விற்று அதன்மூலம் கிடைத்த பணத்தில் உதவி செய்து வருகிறார்.

  கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை இந்தியாவில் கடுமையாக உள்ளது. கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவர்களில் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி போட்டப்பட்டுவரும் சூழலில் அதிகரிக்கும் கொரோனா தொற்றும் அதனால் ஏற்படும் மரணங்களும் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஒருபுறம் என்றால் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் இல்லாத சூழல் பல்வேறு மாநிலங்களில் நிலவுகிறது.

  போதிய படுக்கை வசதி இல்லாமை, ரெம்டெசிவர் மருந்து தட்டுப்பாடு, ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் ஏற்படும் மரணம் என கொரோனா இரண்டாவது அலை அச்சத்தை விதைக்கிறது. மருத்துவ ஆக்ஸிஜனுக்காக மாநில அரசுகள் மத்திய அரசை நம்பியுள்ளது. இந்நிலையில்தான் பணவசதி இல்லாமல் சிரமப்படும் ஏழைகளுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டரை தனது சொந்த செலவில் வழங்கி வருகிறார் மும்பையைச் சேர்ந்த ஷானவாஸ் ஷேக். மும்பையின் மலாட் பகுதியைச் சேர்ந்த இவரை அப்பகுதி மக்கள் ‘ஆக்ஸிஜன் மேன்’ என்றே அழைக்கின்றனர். கடந்தாண்டு கொரோனா தொற்றின் காரணமாக இவரது நண்பரின் மனைவி ஆக்ஸிஜன் கிடைக்காமல் உயிரிழந்துள்ளார்.

  இதனையடுத்து கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக ஆக்ஸிஜன் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என முடிவு எடுத்துள்ளார். நண்பர்கள் மற்றும் தன்னார்வலர்களுடன் இணைந்து இதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். ஒரு போன் செய்தால் போதும் தேவையான நபர்களுக்கு ஆக்ஸிஜன் சப்ளை இலவசமாக கிடைப்பதை இவர் உறுதிசெய்கிறார். கண்ட்ரோல் ரூம் போன்று இவர்கள் செயல்படுகின்றனர். 24 மணி நேரமும் இவர்களை தொடர்புகொள்ளலாம். கடந்தாண்டில் இருந்து இந்தப்பணியை மேற்கொண்டு வருகிறார்.

  மூன்று மாதத்துக்கு முன்பு வரை ஒரு நாளைக்கு ஆக்ஸிஜன் தேவை என 50 போன் கால்கள் வந்ததாம். கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள இந்த நேரத்தில் ஒருநாளைக்கு 500 - 600 போன் கால்கள் வருவதாக ஷானவாஸ் ஷேக் கூறுகிறார். நாளுக்கு நாள் தேவை அதிகரித்தால் ஒரு கட்டத்தில் இவருக்கு பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த சேவையை நிறுத்தக்கூடாது என முடிவெடுத்த ஷானவாஸ் தான் ஆசையாக வாங்கிய 22 லட்சம் மதிப்புள்ள சொகுசு காரான ஃபோர்ட் எண்டவரை விற்றுள்ளார். இதன்மூலம் கிடைத்த பணத்தில் 160 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வாங்கியதாக கூறியுள்ளார்.

  ஆக்ஸிஜன் முடிந்த பின்னர் அந்த சிலிண்டர்கள் இவர்களுக்கு திரும்ப அனுப்பப்படுகிறது. மீண்டும் அவற்றை நிரப்புக்கின்றனர். ஷானவாஸ் மற்றும் அவரது குழு இதுவரை 4000 பேருக்கு உதவி செய்துள்ளதாக கூறுகின்றனர்.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Corona, Covid-19, Covid-19 vaccine, Mumbai