மகள், பேத்தியை பாலியல் வன்புணர்வு செய்த 65 வயது நபருக்கு ஆயுள்தண்டனை!

ஆயுள்தண்டனை

மகளையும், பேத்தியையும் பாலியல் வன்புணர்வு செய்த மும்பையைச் சேர்ந்த 65 வயது நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
மகள், பேத்தி என்றும் பாராமல் படுபாதக செயலில் ஈடுபட்டு இருவரையும் பாலியல் வன்புணர்வு செய்து வந்த 65 வயது நபருக்கு மும்பையில் உள்ள சிறப்பு போஸ்கோ நீதிமன்றம் ஆயுள் தண்டனையை வழங்கியது.

தான் 15 வயதாக இருக்கும் போதிலிருந்தே அந்த கொடுமை நடந்து வந்ததாக தனது தந்தைக்கு எதிராக நீதிமன்றத்தில் வாக்கு மூலம் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் மகள். தனக்கு திருமணம் ஆன போதிலும் கூட தனது தந்தையின் சித்ரவதை தொடர்ந்து கொண்டிருந்ததாகவும், இதனை யாரிடமாவது கூறினால் தன்னுடைய மகளை உண்டு இல்லை என செய்துவிடுவதாகவும் மிரட்டியிருக்கிறார் அவரின் தந்தை.

தனது தாயுடன் இணைந்து வீட்டு வேலை பார்த்து வருகிறார் அப்பெண். அவருடைய தந்தை, சகோதரர், கணவரும் பெயிண்டிங் வேலை செய்துவருகின்றனர். வாய் மூடி மவுனியாக இருந்து வந்த அப்பெண் தனது அண்டை வீட்டாரிடம் மட்டும் தனக்கு நடந்துகொண்டிருந்த கொடுமைகளை பற்றி விவரித்திருக்கிறார்.

இப்படியே சென்றுகொண்டிருந்த போது 2017ம் ஆண்டு அப்பெண்ணின் மைனர் வயது மகளை, அவருடைய தாத்தா பாலியல் வன்புணர்வு செய்த தகவலை அவரின் தாயாரிடம் சொன்ன போது அதிர்ந்து போன அப்பெண் உடனடியாக இது குறித்து அருகில் உள்ள காவல்நிலையத்தில் தனது தந்தை மீது புகார் அளித்திருக்கிறார்.

எப்பெண்ணின் 65 வயது தந்தை மீதானவழக்கை விசாரித்து வந்த மும்பை சிறப்பு போஸ்கோ நிதிமன்ற நீதிபதி பந்தரே அனைத்து ஆதாரங்கள், சாட்சியங்களின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்ட நபர் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானதாக தீர்பளித்தார்.

மேலும் அந்த நபருக்கு ஆயுள் தண்டனை அளித்ததோடு மகளுக்கு 50,000 ரூபாயும், பேத்திக்கு 25,000 ரூபாய் இழப்பீடு தொகை செலுத்துமாறு உத்தரவிட்டார்.
Published by:Arun
First published: