• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • உலகின் மிகவும் நேர்மையான நகரங்களின் பட்டியலில் 'இரண்டாமிடம்' பிடித்த மும்பை..

உலகின் மிகவும் நேர்மையான நகரங்களின் பட்டியலில் 'இரண்டாமிடம்' பிடித்த மும்பை..

மும்பை

மும்பை

உலகின் "மிகவும் நேர்மையான" நகரங்களின் பட்டியல் வெளியாகிவுள்ளது.

  • Share this:
நம்மில் பெரும்பாலானோர் சோஷியல் மீடியாக்களில் அதிக நேரம் செலவிட்டு வருகிறோம். அப்போது நாம் பல வேடிக்கை வீடியோக்களை பார்க்க நேரிடுகிறது. சில நேரங்களில் அடுத்தவர்களின் நேர்மையை சோதிக்கும் சில வீடியோக்களையும் நாம் பார்த்திருப்போம். அந்த வீடியோக்கள் லாஸ்ட் வாலெட் சோஷியல் எக்ஸ்பிரிமென்ட் என்ற தலைப்பின் கீழ் வெளிவருவதையும் கண்டிருப்போம்.

அதாவது பொது இடத்தில் இருக்கும் ஒருவர் நடந்து செல்லும் போதோ, பயணம் செய்யும் போதோ பணத்தாள்கள் அடங்கிய தனது பர்ஸை கீழே தவற விடுவதை பார்க்கும் ஒருவர், அவரை அழைத்து மீண்டும் அவரிடமே அந்த வாலெட்டை கொடுக்கிறாரா அல்லது அதை எடுத்து தாங்களே வைத்து கொள்கிறார்களா என்பதை அவர்களுக்கே தெரியாமல் வீடியோ எடுக்கப்படும்.

இந்த டெஸ்ட் நேர்மையை பரிசோதிக்கும் மிகவும் பிரபலமான ஒன்றாக சர்வதேச அளவில் இருந்து வருகிறது. இதனிடையே Reader’s Digest என்ற பத்திரிகை பல நாடுகளில் இந்த லாஸ்ட் வாலெட் சோஷியல் எக்ஸ்பிரிமென்ட்டை நடத்தி, உலகின் "மிகவும் நேர்மையான" நகரங்களின் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவின் வணிக தலைநகரான மும்பை இடம்பெற்றிருப்பது இந்தியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

ரீடர்ஸ் டைஜிஸ்ட் நடத்திய வாலெட் லாஸ்ட் பரிசோதனையில் உலகின் சுமார் 16 முக்கிய நகரங்களில் பர்ஸ்கள் வேண்டுமென்றே தவறவிடப்பட்டது. ஆம்ஸ்டர்டாம், பெர்லின், புக்கரெஸ்ட், புடாபெஸ்ட், ஹெல்சின்கி, லிஸ்பன், லுப்ல்ஜானா, லண்டன், மாட்ரிட், மாஸ்கோ, மும்பை, நியூயார்க், ப்ராக், ரியோ டி ஜெனிரோ, வார்சா மற்றும் சூரிச் உள்ளிட்ட சிட்டிகளில் இந்த சோதனை நடந்தது. இந்நகரங்களில் தவறவிடப்பட்ட பர்ஸ்களில் எத்தனை மீண்டும் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது என்பதும் இந்த பரிசோதனையில் பதிவு செய்யப்பட்டது.

தவறவிடப்பட்ட ஒவ்வொரு வாலெட்டிலும் தவறவிட்டவரின் செல்போன் எண், குடும்ப புகைப்படம் மற்றும் 50 டாலர் ( சுமார் ரூ.4,000) பணம் போன்றவை இருந்தன. இறுதியாக இந்த டெஸ்ட்டில் பின்லாந்தின் ஹெல்சின்கி நகரம் முதலிடம் பிடித்துள்ளது. இந்த நகரத்தில் மொத்தம் 12 வாலெட்கள் வேண்டுமென்றே தவறவிடப்பட்ட நிலையில், அதில் 11 வாலெட் மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதன் மூலம் உலகின் மிக நேர்மையான நகரங்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது ஹெல்சின்கி. ஆனால் ஹெல்சின்கி நகரை ஒப்பிடும் போது நமது மும்பை பலமடங்கு மக்கள் தொகையை கொண்டது. ஆனால் மும்பையிலன் பரபரப்பான பகுதிகளில் வேண்டுமென்றே தவறவிடப்பட்ட 12 வாலெட்களில், 9 வாலெட் மீதும் உரியவர்களிடம் வந்து சேர்ந்தது.

இதன் மூலம் நமது மும்பை நகரம் உலகின் மிக நேர்மையான நகரங்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்து உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. வாலெட்டை திருப்பி கொடுத்தவர்களில் 27 வயதான வீடியோ எடிட்டர் ஒருவர், 2 குழந்தைகளின் தாய் மற்றும் 3 டீனேஜர்ஸ் அடக்கம். 2019-ஆம் ஆண்டில் 6,519 குற்றங்கள் மும்பை நகரில் பதிவான நிலையில், கடந்த ஆண்டு 4,583 கிரிமினல் கேஸ்கள் மட்டுமே பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

 
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: